என்னுடைய நேரம்

அவந்திகாவின் ஒரு பழக்கம் என்னவென்றால், எந்தப் பணிப்பெண் வந்தாலும் அவர்கள் அவளுடைய எதிர்பார்ப்புக்குத் தோதாக இல்லாவிட்டால் நிறுத்தி விடுவாள். அவளுடைய எதிர்பார்ப்புக்கு நூற்றுக்கு நூறு தோதான எடுபிடி நான்தான். பணிப்பெண்ணை நிறுத்தி விட்டால் எல்லா எடுபிடி வேலையும் நான்தான் செய்ய வேண்டும். முக்கியமான எடுபிடி வேலை, பாத்திரம் தேய்ப்பது, குக்கரில் சோறு பருப்பு வைப்பது, காய்கறி நறுக்கிக் கொடுப்பது. இது எல்லாம் எனக்கு ஒரு மூன்று மணி நேரம் ஆகும். இந்த மூன்று மணி நேரத்தையும் எனக்கு … Read more

சிங்கள கலாச்சார சூழல் – 2

நேற்று கேகே பற்றி எழுதியிருந்தேன். அவர் 39 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஸர்ப்பயா கதையை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கதையினால்தான் அவரை ஸர்ப்பயா என்றே அழைக்கிறார்கள். நான் படித்த எல்லா ட்ரான்ஸ்கிரஸிவ் கதைகளிலும் ஆகச் சிறந்ததாக இருந்தது இந்தக் கதை. ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த அளவுக்குத்தான் முடியும். கேகேயின் சிங்களம் நிறைய சிலேடைகளும் வார்த்தை விளையாட்டுகளும் நிறைந்தது என்கிறார்கள். அவர் ஆங்கிலத்தில் எழுதிய Cunt-try என்ற கவிதையைத்தான் என் நாவல் பெட்டியோவில் சேர்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலேயே. … Read more

சிங்கள கலாச்சார சூழல் -1

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தைப் போட்டு அடிதடியான போதே முடிவு செய்து விட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை தமிழில், தமிழ்நாட்டில் நாடகம் போட முடியாது என்று. ஏன் என்று நண்பர்கள் கேட்கும்போதெல்லாம் என் நாடகத்தில் நடிப்பவர்களின் உடை இங்கே உள்ள கலாச்சாரவாதிகளால் தாங்க முடியாததாக இருக்கும், சமயங்களில் பாத்திரங்கள் நிர்வாணமாகக் கூட வருவார்கள் என்பேன். நல்ல காலம், என் கலை எழுத்து என்பதாலும், தமிழர்கள் வாசிப்பை வெறுப்பவர்கள் என்பதாலும் நான் … Read more

சர்ப்பயா என்ற கே.கே. பற்றி…

இலங்கைக்கு ரொம்பவும் எதேச்சையாகத்தான் சென்றேன்.  மிக மிகத் தற்செயலாக நிகழ்ந்த சம்பவம்.  றியாஸ் குரானா அழைத்திருக்காவிட்டால் என் ஆயுள் முழுவதுமே நான் இலங்கை செல்வதற்கான வாய்ப்பே இல்லை.  ஏனென்றால், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள் அல்ல.  இரு சாராருமே தமிழ் சினிமா என்ற அசிங்கத்தின் ரசிகக் குஞ்சாமணிகள்.  இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களோ புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள்.  உள்ளூரில் எழுதுபவர்களெல்லாம் மு.வ. காலத்து ஆட்கள்.  அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  அதற்கெல்லாம் மு.வ. காலத்திலேயே … Read more

நண்பர்களின் கவனத்துக்கு…

இப்போது நான் எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி இன்னும் சில நாட்களில் விரிவாகவே எழுத இருக்கிறேன். நான் கடந்த மூன்று மாதங்களாக மிகக் கடுமையான மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். மலச்சிக்கல் என்றால் நான்கு தினங்கள் கூட மலம் வெளியேறாமல், சாப்பிட முடியாமல் பெரும் அவதி. அதோடேயேதான் ஸ்ரீலங்காவும் சென்று வந்தேன். ஆச்சரியத்துக்குரிய வகையில் ஆயுர்வேத மருந்தும் காப்பாற்றவில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருநாள் ஃபேஸ்புக்கில் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றித் தற்செயலாக அறிந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. பாஸ்கரன் … Read more