மகிழ்ச்சியான தினம்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சியான நாவலை எழுதி முடித்தேன். அதுவும் நான்கே நாட்களில். 125 பக்கம். பேய் வேகத்தில் எழுதினேன். அடை மழை போல் கொட்டின வார்த்தைகள். இருவருக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் ஒரே அமர்வில் படித்து விட்டார்கள். அதுவே பெரிய வெற்றி. நான் நினைத்தது போலவே இறுதி அத்தியாயம் பிரமாதம் என்கிறார்கள். நானும் அப்படி சமீப காலத்தில் எழுதியது இல்லை. நேற்று முடித்து அனுப்பும்போது நள்ளிரவு. இதைக் கொண்டாடுவதற்கே கோவா போகலாம் என்று இருக்கிறது. … Read more

பெட்டியோ நாவல் தயார்

பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். முதல் ட்ராஃப்ட்டில் 105 பக்கம். நான்கு நாள்களில் எழுதினேன். இத்தனை வேகத்தில் என் வாழ்வில் இதுவரை எழுதியதில்லை. ஸீரோ டிகிரியில் புழங்கிய மொழி நடை இனி எனக்கு லபிக்காது, அந்தக் காலம் வேறு, அப்போதிருந்த மனோலயம் வேறு என்றே நினைத்திருந்தேன். பெட்டியோ நாவலில் ஒரு முழு அத்தியாயம் ஸீரோ டிகிரியையும் விட கனமாக வந்திருக்கிறது. என் எழுத்து எளிமையாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த அத்தியாயம் மட்டும் வேறு … Read more

ஒரு புதிய நாவல்… என்.எஃப்.டி.யில்

மிக மும்முரமாக பெட்டியோ நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். நாளைக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம். இன்று மூன்றாவது நாள். நான்கு நாள்களில் ஒரு நாவல் எழுதியது இப்போதுதான். அன்பு நாவலை பத்து நாளில் எழுதினேன். ஆனால் அதில் ஒரு நாற்பது சதவிகிதம் இணைய தளத்தில் உள்ளது. இப்போதைய பெட்டியோ நாவலில் இரண்டு பக்கம் மட்டுமே தளத்தில் இருக்கிறது. மற்றவை அனைத்தும் புதியது. அராத்துவுக்கே தெரியாது. அனோஜன் மற்றும் ப்ரஷாந்த் இருவருக்கும் மட்டுமே தெரியும். அதிலும் சிலது அவர்களுக்கும் … Read more

இன்று மாலை ஃபேஸ்புக் லைவில்…

இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் உரையாற்ற இருக்கிறேன். இன்று காலை பதினோரு மணியிலிருந்தே ஆரோவில்லில் சிறுகதைப் பட்டறை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பரோல் கிடைக்கவில்லை. அதனால்தான் ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் பேசுகிறேன். ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை, இராசேந்திர சோழனின் இசைவு, சு. வேணுகோபாலின் உள்ளிருந்து உடற்றும் பசி ஆகிய மூன்று சிறுகதைகள் பற்றிய பட்டறை. என் உரை இம்மூன்று சிறுகதைகள் பற்றியும் பொதுவாக எழுத்தும் பாலியலும் … Read more

ஒரு உச்சரிப்பு விளக்கம்

பேடியோ என்பதன் சரியான உச்சரிப்பு ஆங்கிலத்தில் cat, apple போன்ற வார்த்தைகளில் வரும் உச்சரிப்புதான். Paediya என்றால் செல்லக்குட்டி. கடைசி எழுத்தில் ‘எ’வுக்குப் பதிலாக ‘ஓ’ போட்டால் செல்லக்குட்டீ…

பேடியோ (Paediyo)

சிங்களத்தில் பேடியோ (Paediyo) என்றால் செல்லக்குட்டி என்ற பொருள் வரும். அந்தத் தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரையை விட ஒரு நாவலுக்குரிய fantastic சம்பவங்கள் நடந்ததால் குறுநாவலாகவே எழுதி விடலாம் என்று முடிவு செய்தேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.