பேடியோ (Paediyo)

சிங்களத்தில் பேடியோ (Paediyo) என்றால் செல்லக்குட்டி என்ற பொருள் வரும். அந்தத் தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரையை விட ஒரு நாவலுக்குரிய fantastic சம்பவங்கள் நடந்ததால் குறுநாவலாகவே எழுதி விடலாம் என்று முடிவு செய்தேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.

எனக்கு உயிராபத்து

நான் இலங்கைக்கு வந்ததிலிருந்தே என்னை நக்கல் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்னை இலங்கைக்கு வரவழைத்த றியாஸ் குரானா.  நேற்று அவர் என்னைச் சந்தித்தபோது எனக்கு உயிராபத்து இல்லை.  இன்றுதான் வந்தது.  அதுவும் றியாஸின் நண்பர் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ்.  அவருக்கும் உயிராபத்து.  மிகவும் நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் அவர் எனக்கு அந்த வாய்ஸ் மெஸேஜை அனுப்பியிருந்தார்.  அதைப் பார்த்து விட்டுத்தான் இங்கேயிருந்து தப்பி விடலாம் என்று முடிவு செய்தேன்.  இங்கே அனாதையாக செத்தால் என்ன செய்வது என்று எழுதியிருந்தேன் அல்லவா?  … Read more

கொழும்பு பயணம்

இங்கே பாசிக்குடாவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. இங்கே இருந்து கொண்டு எழுதுவது சாத்தியம் இல்லை. ஏனென்றால், இவர்களின் அவதூறுகளுக்கு நான் பதில் எழுதவில்லை. எழுதினால் தலை என்னிடம் இருக்காது. அதனால் கொழும்பு கிளம்புகிறேன். என்னை நேரில் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. ஒரு பெண் கூட வந்து ஆதரவு தருவதாகச் சொன்னார். துரதிருஷ்டவசமாக அவர் பெயரை மறந்து போனேன். கொழும்புவில் மூன்று நாள் இருப்பேன். என்னை அழைத்த நண்பர்களுக்குப் … Read more

நான் யார்?

நான் யார் என்று தெரியாத சிலர் றியாஸ் குரானா என்னை ஏறாவூருக்கு அழைத்தது பற்றி அவருக்கு உளவியல் நெருக்கடி கொடுப்பதை ஃபேஸ்புக் மூலம் அறிந்தேன்.  நான் ஒன்றும் நீயா நானா கோபிநாத் போலவோ திண்டுக்கல் லியோனி போலவோ இங்கே இலங்கை வரவில்லை.  நான் வந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆயிற்று.  இதுவரை ஆன செலவு பூராவும் என்னுடையது.  இப்போது இங்கே பாசிக்குடாவில் தங்கியிருக்கும் செலவும் என்னுடையதுதான்.  என் வாசகர்களிடம் நான் பெற்ற சன்மானத்தினால் மட்டுமே இது எனக்கு … Read more

தனிமனித சுதந்திரம்

முத்து என்று எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.  மிகவும் நெருக்கமான நண்பர்.  நான் சந்தித்த மனிதர்களிலேயே மிகச் சிறந்த படிப்பாளி என்றால் அவர்தான்.  எனக்கு அறிவின் மீது தீராக் காதல் என்பதால் அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.  ஆனால் நட்பு என்றால் அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.  அவருக்கு என் எழுத்தின் மீது துளியும் மரியாதை இல்லை என்பதை நீண்ட காலம் கடந்து கண்டு கொண்டு அவரிடமிருந்து விலகி விட்டேன்.  அது எனக்கு மிகப் … Read more

உயிரின் விலை

நான் கணக்கில் எத்தனை பலவீனன் என்பதும், சீனி எனக்கு எத்தனை உறுதுணையாக இருக்கிறார் என்பதும் மீண்டும் நிரூபணம் ஆகியது.  ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் நலம் என்று எழுதி விட்டேன்.  நூறு பேர் என்று எழுதியிருக்க வேண்டும்.  இதைக் கூட சீனி மட்டும்தான் சுட்டிக் காட்டினார்.  ஆயிரம் பேரா பணம் அனுப்புவார்கள்? நான் என்ன ஆன்மீகவாதியா?  சீனிக்கு அது நூறு பேர் என்று புரிந்து விட்டது.  இப்போது மாற்றி விட்டேன்.  அந்தக் … Read more