வழிந்தால் வழிவேன்

கடந்த புத்தக விழாவின் போது ஒரு பிரபலமான பெண்மணி என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு தன் தோழியிடம் எனக்கும் கேட்கிறாற்போலவே “பார், சாருவின் கன்னம் எப்படி மின்னுகிறதென்று?” என்றார். மற்றவர்களாக இருந்தால் ஹி ஹி என்று வழிவார்கள். நான் வேறு மாதிரி வழிந்தேன். “எனக்காவது கன்னம் மட்டும்தான் மின்னுகிறது. உங்களுக்கோ முழு தேகமே மின்னுகிறதே?” என்றேன். அப்போது அவர் பார்த்த ஒரு பார்வைக்கு இந்த உலகத்தையே தூக்கிக் கொடுத்து விடலாம். ஆனால் அவருடைய தொலைபேசி … Read more

இளையராஜா – றியாஸ் குரானா

நேற்று இளையராஜாவின் காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்டு மனம் மிக நொந்தேன். ராஜாவின் பாடல்களிலேயே ஆக மட்டமான பாடல். அப்படிக் கூட சொல்ல முடியாது. அந்தப் பாடலை ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அத்தனை மட்டமான பாடல். இதை ஃபேஸ்புக்கில் எழுதியதும் எல்லோரும் என் மீது வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே வசை. தன் அசிங்கம் அவ்வளவையும் என் மீது கொட்டினார்கள். எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. எல்லோரும் எத்தனை அசிங்கத்தோடு திரிகிறார்கள் … Read more

ஒரு fetish கதை…

ஆட்டைப் புணர்ந்தது போல் இருந்தது அந்தக் கதை.  ஆட்டைப் புணர்வது வக்கிரத்தில் வரும்.  ஆனால் அதையே ஒருத்தன் ஆட்டின் ஆசன வாய்க்கு ஒரு வர்ணனை, அதன் மடிக்கு ஒரு வர்ணனை, அதன் மூஞ்சிக்கு ஒரு வர்ணனை என்று வர்ணித்து வர்ணித்து எழுதினான் என்றால் அதை fetishஇன் உச்சக்கட்டம் என்றுதானே சொல்வீர்கள்?  சில வெளிநாடுகளில் கக்கூஸ் மாதிரி ரெஸ்டாரண்ட் கட்டி அங்கே சாப்பிடுகிறார்கள்.  ஒரு இணைய வேசி தன் அபானவாயுவைப் பிடித்து என்.எஃப்.டி.யில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறாள்.  … Read more

புதிய வாசக தளம்

என்னுடைய அருஞ்சொல் நேர்காணல்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் நான் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் என்னை இதுகாறும் தொடர்ந்து வரும் வாசகர்களுக்குப் பரிச்சயமாகி இருக்கலாம். ஆனால் இப்போது அருஞ்சொல்லில் அது எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறேன். மேலும், அருஞ்சொல் வாசகர்களுக்கு அது எல்லாமே புதியவை. அருஞ்சொல் மூலம் நான் பல ஆயிரம் புதிய வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறேன் என்பதும் தெரிய வருகிறது. உதாரணம் இந்தக் கடிதம். உங்கள் பெயரே எனக்கு இரண்டு தினங்களாகத்தான் தெரியும் என்று ஆரம்பிக்கிறது … Read more

எழுத்தாளராவது எப்படி? – சிறுகதை

எனக்கு ஜெயமோகன் மீது ஒரே ஒரு விஷயத்தில்தான் பொறாமை.  அவருடைய வாசகர்கள்.  கோவையில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவை நடத்திக் காண்பிக்கிறார்கள்.  அது தவிர மாதாமாதம் ஒவ்வொரு ஊரிலும் வெண்முரசு கூட்டம்.  அமெரிக்காவிலோ கேட்கவே வேண்டாம்.  இங்கே இருந்தபடியே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு அவரது அமெரிக்க வாசகர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  விஷ்ணுபுரம் வட்டத்தில் உள்ள ஒரு பத்து முக்கியஸ்தர்களுக்கு ஒரு கொக்கரக்கோ சமம்தான் என்றாலும் … Read more

அருணாசலத்துக்கு வாழ்த்து

அருணாசலம் பற்றி எழுதியிருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை நான் கண்டதில்லை. அவர் கோபப்பட்டு நானோ நண்பர்களோ பார்த்ததில்லை. அதிர்ந்து கூடப் பேச மாட்டார். புகைப்பழக்கம் கிடையாது. மதுவைத் தொட்டதே இல்லை. எந்தப் பெண்ணையும் ஏறிட்டும் பார்க்க மாட்டார். எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், தூய சைவம். மதுரையில் எப்படி இப்படி ஒரு அதிசயம் நிகழ முடியும் என்றே எனக்குப் புரியவில்லை. தஞ்சாவூர் என்றால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மதுரையிலா? ஆனால் நேரில் பார்ப்பதற்கு … Read more