பாமரர் உலகம்

இங்கே தமிழ்நாட்டில் படிக்காதவர் பாமரர் அல்ல; அவருக்காவது கொஞ்சூண்டு காமன்சென்ஸ் உள்ளது. இங்கே பாமரர் என்ற பிரிவுக்குள் வருபவர்கள் பெரும்பாலும் புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் சில பத்திரிகையாளர்களுமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாமரர் என் பெயரைக் குறிப்பிட்டு தமிழ் இந்து தினசரியில் அவதூறாக எழுதியிருந்தார். அதேபோல் ஒரு பேராசிரியரும் அடிமட்டித்தனமாக எழுதியிருந்தார். இருவருக்கும் பதில் கூறுவது என் வேலையல்ல, நான் இரண்டு நாவல்களை இப்போது ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த மூடர்களுக்கு பதில் சொல்ல நேரமும் இல்லை. … Read more

மொழிபெயர்ப்பு அவலம்

தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களை நான் படிப்பதே இல்லை. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கிலமே தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தால் இலக்கியமும் தெரியவில்லை, இலக்கியத் தமிழும் தெரியவில்லை. அதனால் அந்தப் பக்கமே நான் செல்வதில்லை. நேற்று அராத்து எழுதியிருந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன். அதில் அவர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கிரேக்க நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளை மேற்கோள் கொடுத்திருந்தார். அந்த நாவல் கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் வந்துள்ளது. அந்த நாவல் … Read more

நடனமும் இசையும்…

சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அதற்கு ஆடியவர்கள் நடிகர்கள் இல்லை. சராசரி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள். மத்திம வயதுக்காரர்கள். நூற்றுக்கணக்கான – உண்மையில் ஆயிரக்கணக்கில் அந்தப் பாடலுக்கு ஆடி காணொலிகளை விட்டுக் கொண்டிருந்தனர். நானே ஒரு ஐம்பது ஜோடிகளின் ஆடலைப் பார்த்திருப்பேன். அந்தப் பாடலின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், நாட்டுப்புறத்தன்மை எல்லாம் சேர்ந்து அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் பிடித்து விட்டது என்று தெரிந்தது. சினிமாப் பாடலா, வேறு நாட்டுப் பாடலா என்று தெரியாமல் கூகிளில் தேடினேன். எனிமி என்ற … Read more

மாறுவேடத்தில் இலங்கைப் பயணம்

Mihadஇன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதைப் பார்த்தேன். ”இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா வருவது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சாருவை விரும்பாத ஒரு கூட்டம் புலம்பெயர் சூழலில் உள்ளது என்பதனால் ஒரு பரபரப்பு ஏற்படுத்த படுவதாக கருத முடியும். சாருவை விரும்பாமல் போவதற்கு அவர்களுக்கு ஏதோ காரணங்கள் இருக்கக் கூடும். அது சாருவின் எழுத்துகள் மீதானதாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு தமிழக எழுத்தாளர்கள் மீது அளவு கடந்த லயிப்பு ஏற்பட்டதில்லை. கடந்த … Read more

அதே கேள்வி, அதே பதில்…

அருஞ்சொல்லில் வரும் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சமஸ் கேட்கிறாரே தவிர அவை அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. பொதுப்புத்தியில், பொதுச்சமூகத்தில் பலராலும் கேட்கப்படும் கேள்விகளையே அவர் முன்வைக்கிறார். அருஞ்சொல் உரையாடல் இதுவரை என்னை அறியாத பலரிடம் என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இதுவரை நான் நேரடியாக அறிந்திராத பல நண்பர்கள் எனக்கு ஃபோன் செய்தார்கள். இன்னும் ஓரிரண்டு வாரம் வரும் என்று நினைக்கிறேன். இன்று அந்த அருஞ்சொல் உரையாடல் பற்றி ஜெயமோகனின் தளத்தில் ஒரு கேள்வி பதில் … Read more

எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-dont-follow