ஒரு திருத்தம்

நாடகத்தின் அங்கம் 2 காட்சி 2இல் வரும் Charlemagne என்ற பெயரில் “r” என்ற எழுத்து விடுபட்டிருக்கிறது. அதேபோல் அந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு ஷார்ல்மான்ய. சார்லிமேன் அல்ல. ஏதோ ஒரு வேகத்தில் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேன். உச்சரிப்பு விஷயத்தில் இப்படி நடந்ததே இல்லை. ஆனால் St Patrickஇன் பெயரை ஐரிஷ்காரர்கள் பேட்ரிக் என்றும் ஃப்ரெஞ்சுக்காரர்கள் பாத்ரிக் என்றும்தான் உச்சரிப்பார்கள். அதனால்தான் நாடகத்தில் வரும் ஐரிஷ் பாதிரிகள் பேட்ரிக் என்றும் ஆர்த்தோ பாத்ரிக் என்றும் பேசுகிறார்கள். அதனால் … Read more

வெறியாட்டம்

சில நண்பர்கள் ஆர்த்தோ நாடகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லை. இதைப் படித்தவுடன் அனுப்பி வையுங்கள். *** வணக்கம் சாரு, இதுவரை  உங்களுடைய அ-புனைவுகளைப்  படித்துக் கொண்டிருந்த நான் இப்பொழுதுதான் புனைவுகளை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  “அன்பு” நாவல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முதலில் எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் வாசித்தேன்.  பின்னர் “நேநோ” தொகுப்பில் சில சிறுகதைகள், ஸீரோ டிகிரி, இப்பொழுது எக்ஸைல்.  ஒரு மாத காலமாக உங்கள் எழுத்துக்களிலேயே மூழ்கிக் கிடக்கிறேன்.  எல்லாமே … Read more

ஆர்த்தோவின் குரலும் கலையின் கூச்சலும்

சிங்கப்பூரைச் சேர்ந்த இளங்கோவன் அகஸ்தோ போவால் போன்ற உலகப் புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களிடம் நாடகம் பயின்றவர். அக்னிக் கூத்து அமைப்பின் இயக்குனர். நாடகாசிரியர். நாடக இயக்குனர். ”அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்” நாடகம் பற்றி அவர் எழுதியிருந்த கடிதத்தை நாடகம் பற்றிய மூவரின் கருத்துரைகளில் சேர்த்திருக்கிறேன். மற்ற இருவர் ஜெயமோகன், அ. ராமசாமி. இன்று என் நண்பர்கள் முப்பது பேருக்கு நாடகத்தின் பிடிஎஃப் பிரதியை அனுப்பி வைத்தேன். இன்றும் இளங்கோவன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். … Read more

கோவா நடனம்

நாளை என்னுடைய தளத்தில் கோவா நடனம் என்ற நெடுங்கதை வெளியாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நெடுங்கதை. சீனி படித்து விட்டு சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார். கொக்கரக்கோவின் அட்டகாசம், வினித்தின் ரகளை, ஷ்ரேயா என்ற புதிய பாத்திரம் எல்லாம் சேர்ந்த அதகளம்.

குடை வேண்டுமா?

இடையில் குளிக்கப் போவதும் சாப்பிடுவதும் தவிர, காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறேன்.  காலையில் ஒரு மணி நேர நடை. மற்றபடி எதற்குமே வெளியே செல்வது இல்லை.  இப்படியே ஆறு ஏழு நாள் போனால் மனம் சோர்வுறும் இல்லையா?  அப்போது ஏதாவது ஒரு வெப்சீரீஸ் பார்ப்பேன்.  அதுவும் முக்கால் மணி நேரத்துக்கு மேல் இல்லை.  இப்படியே பத்து எபிசோட் உள்ள சீரீஸைப் பார்த்து முடிக்க மூன்று மாதம் … Read more