எனக்குப் பிடித்த ஆட்டங்கள்…

பல ஆட்டம் உண்டு.  எப்போதாவது தினப்பலன் பார்ப்பேன்.  கெட்ட செய்தி என்று போட்டிருப்பான்.  ங்கோத்தா என்று மனசுக்குள் ஆசீர்வதித்து விட்டுப் போய் விடுவேன்.  ஏனென்றால், எனக்கு எதுவுமே கெட்ட செய்தியாகத் தெரியாது.  சும்மா ஏதோ பீலா விடுகிறேன் என்றுதான் நினைப்பீர்கள்.  அது உங்கள் விருப்பம்.  அடிக்கடி ஜோசியம் பார்ப்பேன்.  கைரேகை பார்ப்பேன்.  எல்லாமே விளையாட்டுதான்.  அப்படிப்பட்ட விளையாட்டுகளில் சமீபத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறது.  Bynge.inஇல் ராஜேஷ் குமார் ஸ்கோர் என்ன, பட்டுக்கோட்டை ஸ்கோர் என்ன, இந்திரா சௌந்தர்ராஜன் ஸ்கோர் … Read more

கதையில் வரும் பெயரும் நீங்களும் ஒன்றா? (சிறுகதை)

என் நண்பர்களிடம் பலமுறை சொல்லி விட்டேன், ஆனால் யாரும் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  அல்லது, நான் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லையோ என்னவோ. கதைகளில் நான் அவர்களின் பெயரையே போட்டு எழுதினால் சிலர் சண்டைக்கு வருகிறார்கள்; சிலர் நானா அப்படிச் செய்வேன், நானா அப்படிச் செய்வேன் என்று சொல்லிக் கதறிக் கொண்டே சவுக்கு மிளாறால் தங்களையே ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொள்கிறார்கள்.  யாருக்கும் அது ஒரு கதை, நம்மிடமிருந்து சாரு கச்சாப் … Read more

அ-காலம் தொடர் பற்றி…

ஒரு விஷயம் கவனித்தேன்.  என் தளத்தில் நான் தினந்தோறும் எழுதினால் மாதம் ஐம்பது பேர் சந்தா/நன்கொடை அனுப்புகிறார்கள்.  வாரம் ஒரு தடவை எழுதினால் அஞ்சு பேர்தான் அனுப்புகிறார்கள்.  அந்த அஞ்சு பேரும் என் நெருங்கிய நண்பர்கள்.  நான் எதுவும் எழுதாமலே போனாலும் அனுப்புவார்கள்.  ஒரு தகவலுக்காகச் சொன்னேன். இப்படி என் தளத்தில் வாரம் ஒருமுறை எழுதினாலும் bynge.in என்ற செயலியில் வாரம் இரண்டு முறை என் கட்டுரைகள் அ-காலம் என்ற தலைப்பில் வந்து கொண்டிருக்கின்றன.  நான் அ-புதினங்களாக … Read more

தேவதையும் பிசாசும்…

ஒரு பிரபல எழுத்தாளரோடு அடிக்கடி பேசுகிறேன்.  கொரோனா காலம் என்பதால் நேரில் பார்ப்பதில்லை.  இல்லையென்றால் நிச்சயம் நேரிலும் சந்தித்திருப்பேன்.  பெயரைக் கூட குறிப்பிடலாம்.  மறுபடியும் புகார் வரும்.  புகார் என்னவென்றால், ரொம்ப நெருங்காதீர்கள் என்பதுதான்.  ஏன், அவ்வளவு கெட்டவரா அவர்?  சே, சே, நீங்கள் மகாத்மா மகாத்மா என்று பலரையும் சொல்வீர்களே, அப்படி ஒரு மகாத்மாதான் அவர்.  ஆனால் அதே சமயம் நீங்கள்தானே வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகினால் கத்தியால் குத்தி விடுவார் என்பீர்கள், அதனால் அந்த … Read more

the ghost bug

“நான் பெரிதாக மெனக்கெடவில்லை, விடுமுறை காலத்தில் இரண்டு நாட்கள் ஜாலியாக ஷூட் செய்தபோது இருந்ததோடு சரி. ஸ்கிரிப்ட் பேப்பர் கூட எழுதவில்லை. அவ்வப்போது திடீரென்று, சுரா வாங்க, மலர் வாங்க, இப்டி பண்ணுங்க, இப்டி எடுங்க என சீன் போட்டு விட்டு கொஞ்ச நேரம் கழிச்சி அடுத்த ஷாட் பாத்துக்கலாம் என வேப் தூக்கிக்கொண்டு பால்கனிக்கு சென்று விடுவேன். தன்னடக்கம், பணிவு எல்லாம் இல்லை. இப்படித்தான் நடந்தது.” The Ghost Bug படம் பற்றி அராத்து தன் … Read more

ரோஹிணி மணியின் ஓவியங்கள்

முன்பெல்லாம் புத்தக அட்டைகளுக்கு எழுத்தாளர்கள் ரொம்பவே மெனக்கெடுவார்கள். இப்போதும் அப்படித்தான் மெனக்கெடுகிறார்கள். ஆனால் இப்போது ஓவியர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளி மிகவும் அதிகமாகி விட்டது. கிட்டத்தட்ட இரண்டு இனமும் ஒன்றை ஒன்று அறியாத வேற்றுக் கிரகவாசிகளாகவே ஆகி விட்டனர். முன்பு கிருஷ்ணமூர்த்தி தான் எல்லா புத்தகங்களுக்கும் அட்டை போடுவார். அவருடைய ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலை போகும். ஆதிமூலம் இன்னும் மேலே. இன்னமுமே அவர் ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலைக்குத்தான் விற்கின்றன. சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர். தன்னை … Read more