எனக்குப் பிடித்த ஆட்டங்கள்…

பல ஆட்டம் உண்டு.  எப்போதாவது தினப்பலன் பார்ப்பேன்.  கெட்ட செய்தி என்று போட்டிருப்பான்.  ங்கோத்தா என்று மனசுக்குள் ஆசீர்வதித்து விட்டுப் போய் விடுவேன்.  ஏனென்றால், எனக்கு எதுவுமே கெட்ட செய்தியாகத் தெரியாது.  சும்மா ஏதோ பீலா விடுகிறேன் என்றுதான் நினைப்பீர்கள்.  அது உங்கள் விருப்பம்.  அடிக்கடி ஜோசியம் பார்ப்பேன்.  கைரேகை பார்ப்பேன்.  எல்லாமே விளையாட்டுதான். 

அப்படிப்பட்ட விளையாட்டுகளில் சமீபத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறது.  Bynge.inஇல் ராஜேஷ் குமார் ஸ்கோர் என்ன, பட்டுக்கோட்டை ஸ்கோர் என்ன, இந்திரா சௌந்தர்ராஜன் ஸ்கோர் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆட்டம்.  தினம் அல்ல.  அதற்கெல்லாம் எங்கே நேரம்?  எப்போதாவது.  இன்றுதான் ஆர்.கே.யின் மதிப்பே எனக்குத் தெரிந்தது.  ஆள் சூப்பர் ஸ்டார்தான் போல.  ஸ்கோர் விவரம்:

ஆர்.கே. 21,600

பி.கே.பி. 12,800

இந்திரா சௌந்தரராஜன் – 12,200

என்னுடைய ஸ்கோர் வேண்டாம்.  அது பற்றி நான் கவலைப்படுவதில்லை.  மொத்தமாக இலக்கிய பீஸை எத்தனை பேர் படிக்கிறார்கள், ஜனரஞ்சக பீஸை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம்.  அவ்வளவுதான்.  இதில் ரமணி சந்திரன் வந்தால் எப்படிப் போகுமோ?  சூப்பர் ஸ்டார் ரமணியா ஆர்.கே.யா?   அந்த ஃபீல்டில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.  இதில் இலக்கிய கோஷ்டியும் அதிகமாக உள்ளே வந்தால் ஒரே ரண களம்தான்.  அதில் ஒரு சுவாரசியம் எனக்கு இருக்கிறது.  எஸ்.ரா.வா,  ஜெமோவா என்று பார்க்க வேண்டும்.  ஜெமோவுக்கு தொண்டர் படை அதிகம்.  எனக்கு ஒருத்தர் விடாமல் ராத்திரி பன்னெண்டு மணிக்கு ஜெமோ அன்றைக்கு எழுதினதன் லிங்கை அனுப்பாமல் இருக்க மாட்டார்.  இப்படி எத்தனை மகானுபாவர்களுக்கு அவர் அனுப்புவாரோ?  மணி சார், மிஷ்கின் சார், வசந்த் சார், ஆர்யா சார், ஷங்கர் சார், கமல் சார், கலாப்ரியா, வண்ணதாசன், இ.பா., குமுதம் ஆசிரியர், விகடன் ஆசிரியர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் சார், சத்குரு சார் என்று எல்லோருக்கும் இதே போன்ற லிங்க் போகும் என்று நினைக்கிறேன்.

என் வாசகர் ஒருத்தரைப் பிடித்தேன்.  யோவ், நீயெல்லாம் மனுசனாய்யா, ஜெமோ வாசகரைப் பார், இன்ன இன்ன மாதிரி வேலை நடக்கிறது, நீயும் அப்படி அனுப்பேன் என்று சொல்லி ஒரு பெரிய லிஸ்டைக் கொடுத்தேன்.  அதில் ஒரு பெரிய ஸைக்காலஜி மேட்டர் இருக்கிறது, பார்த்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் தூங்கப் போகும்போது இப்படி ஒரு லிங்க் வந்து விழுந்தால் அதில் உள்ள எதையாவது ஒன்றை நீங்கள் படிக்காமல் இருக்கவே முடியாது.  அதனால் சொன்னேன்.  பட்டியலைக் கொடுத்தேன்.  மறுநாள் கேட்டேன்.  மறந்துட்டேன் சாரு என்றார் நண்பர்.  அடங்கொய்யால…  இன்னொரு நண்பரிடம் கொடுத்தேன்.  கொஞ்சம் ஜாக்கிரதையாக பட்டியலில் என் பெயரையும் சேர்த்திருந்தேன்.  பட்டியலில் உள்ள பெயர்களைச் சேர்த்து அனுப்பித் தொலையக் கூடாது.  மணி சாரின் மெயில் ஐடி ஒரு பயலுக்கும் தெரிந்து விடக் கூடாது.  ரஹ்மானின் மெயில் ஐடியெல்லாம் ராணுவ ரகசியம்.  தனித்தனியாகத்தான் அனுப்ப வேண்டும்.  மறுநாள் மெயில் வரவில்லை.  கோபத்துடன் ஃபோன் போட்டேன்.  என் போனை எடுக்கவில்லை.  மறுநாளும் லிங்க் வரவில்லை.  போன் போட்டேன், எடுக்கவில்லை.  அப்புறம் இன்னொரு ஆளைப் பிடித்து அவர் மூலம் ஆளை அமுக்கினால் ஆசாமி ஏற்காட்டில் போய் தண்ணியைப் போட்டு விட்டு ஆட்டம் போட்டிருக்கிறார்.  அதற்கப்புறம் நானும் அலுத்துப் போய் விட்டு விட்டேன்.

ஆக, ஜெமோவுக்கு இப்படி பல அணுக்கத் தொண்டர்கள் உண்டு.  எஸ்.ரா.வுக்குப் படை கிடையெல்லாம் தேவையில்லை.  அவருக்கு யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு வாசகர்கள் உண்டு என்று சில பதிப்பாளர்கள் சொல்கிறார்கள். 

என் ஸ்கோர் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை.  நகுலனை பிஞ்ஜ் செயலியில் வெளியிட்டால் அஞ்சு பேர் படிப்பார்கள்.  அதனால் நகுலன் மட்டமா? 

ஆ, சொல்ல மறந்து விட்டேன்.  ஐஃபோனில் பிஞ்ஜ் செயலி செயல்பட ஆரம்பித்து விட்டது.  என்னை பிஞ்ஜ் செயலியில் படிக்காத முகநூல் நண்பர்களை முகநூலிலிலிருந்து துண்டித்து விட இருக்கிறேன்.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை அஞ்சே அஞ்சு நிமிடம் எனக்காகச் செலவிட முடியாதவர்களை நண்பர்களாக வைத்திருந்து என்ன பலன்?

லிங்க்:

https://apps.apple.com/in/app/bynge/id1544942239

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai