172. டிஸம்பர் 18

அந்நியன் சமாச்சாரத்தை இனி ஒருபோதும் எழுத மாட்டேன்.  அது என் வாசகர்களுக்குக் கொஞ்சம் மனக்கிலேசத்தை அளிப்பதாக அறிகிறேன்.  இவர் ஏன் இதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகவே பல கடிதங்கள் வந்துள்ளன.  இனி அந்த சப்ஜெக்டைத் தொட மாட்டேன்.  அதுவே கடைசி.  நான் தீபாவளி அன்று ஊரில் இருக்கத் தேவையில்லை; பொங்கலுக்கும் இருக்க வேண்டாம்; ஏன், ஊரே கொண்டாட்டமாய்க் கிடக்கும் ஜனவரி ஒன்று கூட ஊரில் இல்லாமல் போனால் அத்தனை பிரச்சினை வராது.  ஆனால் டிசம்பர் 16 நான் … Read more

Pithy thoughts – 13

பால்வீதி பார்க்க அந்த அராபியப் பாலைவனத்துக்கு சகாக்களுடன் சென்றிருந்தேன் அரபுச் சட்டத்துக்கு அஞ்சி மதுபானம் எடுத்துப் போகவில்லை ஆனாலும் கில்லாடி பிரபு எனக்காகக் கொண்டு வந்திருந்த ஒரே ஒரு போத்தலை தீர்த்தம்போல் குடித்துத் தீர்த்தோம் எல்லாரும் மூத்தவன் என்பதால் என் பங்கு அதிகமாச்சு மணலில் படுத்தால் தேள் வரும் பாலைவனத் தேள் உயிரைக் குடிக்குமென்று உள்ளே போகச் சொல்லி கூடாரத்தைக் காண்பித்தான் பிரபு பால்வீதிக்கு முன்னால் உயிரும் மயிரும் ஒண்ணு என்று சொல்லி துண்டை உதறி மணலில் … Read more

171. அந்நியன் (2)

அசோகமித்திரன் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு இலக்கிய நண்பர் அழகியசிங்கர்தான்.  அவரை அசோகமித்திரனுக்கு ரொம்பப் பிடிக்கும். வயதான காலத்தில் அசோகமித்திரனுக்கு மிகவும் உதவியாக இருந்தார் சிங்கர்.  சிங்கரை அசோகமித்திரன் நெருக்கமாக உணர்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.  அழகியசிங்கர் பிரச்சினைகள் இல்லாதவர்.  அசோகமித்திரன் இருந்த மகன் வீட்டுக்கு (தி.நகர்) அடுத்த தெருவில் இருந்தார் அழகியசிங்கர். மட்டும் இல்லாமல் இருவரும் கலாச்சார ரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.  எதில் சாதி இல்லாவிட்டாலும் உணவில் வந்து விடுகிறதே, என்ன செய்வது?  நான் … Read more

170. அந்நியன்

காலையில் எழுந்ததும் ஒரு ஐந்து நிமிடம் எனக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பேன்.  பொதுவாக எல்லாம் ங்கொம்மா ங்கோத்தா ரக கடிதங்கள்.  எப்போதாவது பாராட்டுக் கடிதங்கள்.  இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவப் பயிற்சியே அந்தக் காலை நேரக் கடித வாசிப்பு.  ஒருவர் ரேஷன் கடையில் கொரோனா நிவாரணமாகக் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வாங்கி எனக்கு அனுப்புகிறார்.  இன்னொருவன் – அவன் எனது புதல்வர்களில் ஒருவன் என்பதால் ஒருமையில் சொல்கிறேன் – இப்போது பாதிரியாக ஆகி விட்டான்.  பாதிரி அங்கியின் … Read more

5. இசை பற்றிய சில குறிப்புகள்

தமிழில் இசை பற்றி எழுதுபவர்களில் லலிதா ராமின் கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  அடுத்து, சேதுபதி அருணாசலம்.  என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்களில் தி. ஜானகிராமன் பற்றிய நீண்ட கட்டுரையில் சேதுபதி அருணாசலத்தின் தி.ஜானகிராமன் பற்றிய கட்டுரைகளிலிருந்து பல மேற்கோள்களை எடுத்திருக்கிறேன்.  சேது அருணாசலத்தின் கட்டுரைகளை என் source-ஆக அதில் குறிப்பிட்டும் இருக்கிறேன். இன்று காலையில் பாலாசுப்ரமணியன், இசை குறித்து தி.ஜா. எழுதியவற்றை சேதுபதி அருணாசலம் தொகுத்து எழுதியிருக்கும் கட்டுரையின் (தி. ஜானகிராமனின் இசையுலகம்) இணைப்பை … Read more

4. இசை பற்றிய சில குறிப்புகள்

ஒருவர் பிறந்ததிலிருந்தே கண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்.  ஒருவர் எழுதப் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே இலக்கியப் பிரதி எதையுமே தொட்டதில்லை.  ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு உலக சினிமாவைக் கூடப் பார்த்ததில்லை.  தெரிந்ததெல்லாம் விஜய், அஜித், தனுஷ், சூர்யா.  ஒருவர் பிறந்ததிலிருந்தே நல்ல இசையைக் கேட்டதில்லை.  இவர்களுக்கெல்லாம் நீங்கள் காண்பதன் அற்புதங்களையும், இலக்கியத்தின், சினிமாவின், இசையின் சுவைகளையும் மேன்மைகளையும் எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும்? விவேகானந்தரின் வாழ்வில் நடந்த விஷயத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அவர் ஒரு அக்நாஸ்டிக்.  … Read more