அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்

அய்யனாரின் கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்த போது அவரோடு ஒரு நேர்காணல் செய்யலாம் என்று தோன்றியது. முதல் இரண்டு கேள்விகளை இங்கே தருகிறேன். அவர் பதிலை இங்கே முகநூலில் கொடுக்காமல் புத்தகத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் சஸ்பென்ஸ் இருக்கும். இனி கேள்விகள்: கேள்வி: உங்கள் முன்னுரையில் இந்தத் தொகுதிக்கும் முன்பாக மூன்று தொகுதிகள் வந்திருப்பதை அறிந்தேன். இதுவரை தெரிந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். இங்கே யாரும் கவிதை பற்றிப் பேசுவதில்லை. சூழல் அப்படி இருக்கிறது. நானும் … Read more

நார்த்தங்காய்

மாதம் சுமார் பத்துப் பனிரண்டு பேர் சந்தா அனுப்புவார்கள். இந்த மாதம் அதில் ஒருத்தர்தான் அனுப்பியிருந்தார். மற்றவர்கள் கவனிக்கவும். *** முகநூலில் ஒரு தகவல் கேட்பதெல்லாம் சுத்த வேஸ்ட். இருந்தாலும் வெளியுலகத் தொடர்பு எனக்கு முகநூல் மட்டும்தான் என்பதால் திரும்பவும் இங்கேயே வருகிறேன். பெர்ஷியன் பூனை பற்றிக் கேட்டிருந்தேன். முப்பது பேர் லைக் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். ராஜேஷ் மட்டும்தான் நேரில் போய்ப் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். பிறகு ஆன்லைனில் தேடிய போது ஒரு பூனை … Read more

காஷ்மீர்

அரசியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை நிர்மல் என் குரு. ஆயிரம் பக்க புத்தகங்களையெல்லாம் அனாயாசமாக ஒரு வாரத்தில் படித்து அதன் சாரத்தை எனக்கு சொல்லுவார். ஆனால் காஷ்மீர் விஷயத்தில் அவர் என்ன சொன்னாலும் ஒரு விஷயத்தில் நான் fanatic. மத, இன அடிப்படையில் விசேஷ சலுகைகள் கொடுக்கப்படலாகாது. எல்லோரும் சமம். எல்லா மதமும் சமம். ஒரு அறிவுக் கொழுந்து என் காமெண்ட் பாக்ஸில் என்னென்னவோ வாய்க்கு வந்ததை எழுதியிருந்தது. 1947இல் இரண்டு நாடுகள் பிரிந்தது ஜின்னாவுக்கும் நேருவுக்கும் இடையில் … Read more

பித்தநிலையின் உச்சம்

சூஃபி கவிகள் எல்லோருமே ஒரு பித்தநிலையின் உச்சத்தில் நின்றே பாடினார்கள். அந்நிலை பற்றி நான் ஏராளமாக எழுதியிருப்பதால் அவற்றையே திரும்ப எழுதத் தேவையில்லை. பிஸ்மில்லா கான் பதின்பருவத்தில் இருந்த போது காசி விஸ்வநாதர் தன் இசையை ஸ்தூல உருவில் கேட்டிருக்கிறார் என்று சொல்கிறார். மனவெளித் தோற்றம் அல்ல; நிஜமாகவே ஸ்தூல உருவில் என் பக்கத்தில் நின்று கேட்டார் என்கிறார். பிஸ்மில்லா கானுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போகிறது. ஷெனாயை வைத்து விட்டுத் தேடுகிறார். ஆளைக் காணோம். என்ன இது, … Read more

காஷ்மீர் (5)

ராணுவத்தோடு படுப்பதுதான் தேச பக்தியா என்று காஷ்மீர்ப் பெண் ஒருவர் கேட்டதை தலைப்புச் செய்தியாக சில பத்திரிகைகள் போட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் வலியையும் துயரத்தையும் புரிந்து கொண்டே இதை எழுதுகிறேன். ஒரு நிலப்பகுதிக்கு ராணுவம் ஏன் போகிறது? எல்லையைத் தாண்டி தினந்தோறும் தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது பாகிஸ்தான். படிப்பு இல்லாமல் பல காஷ்மீர் சிறார்கள் தீவிரவாதிகளாக ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது, தீவிரவாத சிந்தனையோடுதான் வளர்கிறார்கள். இந்தியாவை அந்நியநாடு என்றே பார்க்கிறார்கள். காஷ்மீரும் மற்றொரு இந்திய மாநிலத்தைப் … Read more