மாதம் சுமார் பத்துப் பனிரண்டு பேர் சந்தா அனுப்புவார்கள். இந்த மாதம் அதில் ஒருத்தர்தான் அனுப்பியிருந்தார். மற்றவர்கள் கவனிக்கவும்.
***
முகநூலில் ஒரு தகவல் கேட்பதெல்லாம் சுத்த வேஸ்ட். இருந்தாலும் வெளியுலகத் தொடர்பு எனக்கு முகநூல் மட்டும்தான் என்பதால் திரும்பவும் இங்கேயே வருகிறேன். பெர்ஷியன் பூனை பற்றிக் கேட்டிருந்தேன். முப்பது பேர் லைக் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். ராஜேஷ் மட்டும்தான் நேரில் போய்ப் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். பிறகு ஆன்லைனில் தேடிய போது ஒரு பூனை விலை 15000 ரூ. விலை போட்டிருந்தது. குட்.
இப்போது நார்த்தங்காய் பற்றி. எனக்கு நார்த்தங்காய் வேண்டும். மைலாப்பூரில் கிடைக்கும் என்றார்கள். விசாரித்தேன். இங்கே அதற்கான பருவத்தில்தான் கிடைக்குமாம். ஆனால் பிக்பாஸ்கட் என்ற ஆப் போட்டால் அதன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பார்கள். என் நண்பர் நறுக்கின முட்டைக்கோஸ் கூட அதிலிருந்துதான் வாங்குகிறார். சரி என்று அந்த ஆப்பை டவுன் லோடு செய்யப்பார்த்தேன். get என்று வந்தது. அழுத்தினேன். என்னுடைய ஐஃபோன் பாஸ்வேர்ட் கேட்டது. உடனே ஸ்ரீராமுக்கு போன் செய்து நோயாளியின் மார்பில் ஸ்டெதஸ்கோப் வைத்து நெஞ்சத் துடிப்பை அளந்து கொண்டிருந்தவரிடம் என் ஐஃபோன் பாஸ்வேர்டைக் கேட்டேன். கண்ணிமைக்கும் நேரத்தில் சொன்னார். நீடூழி வாழ்க ஸ்ரீராம். பாஸ்வேர்டைப் போட்டேன். திறந்தது. பிறகு என் வங்கி அட்டையின் விபரங்களைக் கேட்டது. என் முகவரியைக் கேட்டது. எனக்கோ என் வீட்டு எண் தெரியாது. இன்னும் பத்து ஆண்டுகள் இந்த வீட்டில் இருந்தாலும் தெரிய வாய்ப்பில்லை. பழைய எண் புதிய எண் என்று போட்டுக் குழப்பி அடிக்கிறார்கள். அவந்திகாவின் மூட் எப்படி இருக்கிறது என்று பரிசோதித்தேன். நன்றாக இருந்தது என்று யூகித்தேன். வீட்டு எண்ணைக் கேட்டேன். யூகம் சரிதான். மூட் நன்றாகத்தான் இருந்தது. எதற்குக் கேட்கிறாய் என்றாள். மூட் நன்றாக இருந்தால்தான் இப்படி எதிர்க்கேள்வி வரும். நான் இப்போது நார்த்தாங்காய் புராணத்தைச் சொல்ல ஆரம்பித்தால் எதற்கு நார்த்தங்காய் என்ற கேள்வி வரும். அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் இப்படி ஆன்லைனில் வாங்கித் தின்பதை எப்போது விடப் போகிறாய், இதெல்லாம் உடம்புக்கு நல்லதே இல்லை; இதனால்தான் உனக்கு அடிக்கடி ஹார்ட் அட்டாக் வருகிறது; எவன் உனக்கு இதையெல்லாம் அறிமுகம் செய்கிறவன் என்று சொல்லி அவனைக் கண்டு பிடித்து என் ஃபோனிலிருந்து அவனை அல்லது அவளை ப்ளாக் செய்வாள்.
வம்பா எனக்கு, ஒரு ஆப்பை டவுன்லோடு செய்யணும்மா, நம்பர் குடுக்க முடியுமா முடியாதா என்று கேட்டேன். அவள் நல்ல மூடில் இருப்பதால் நான் கொஞ்சம் இப்படி எகிற முடியும். நம்பர் கொடுத்தாள். விலாசத்தை அடித்தேன். வங்கி அட்டை விபரங்களை அடித்தேன். சிவிவி நம்பர் கூடக் கேட்டான். கொடுத்தேன். Declined. Go to the iTunes store on your computer and update your billing info. போடா dick head என்று சொல்லி விட்டு இப்போது நார்த்தங்காய் எப்படி வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னா லைஃப்யா இது?
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai