To Be or Not To Be

பொதுவாக நான் மேடையில் பேசுவதை யூட்யூபில் மீண்டும் கேட்க மாட்டேன். பிடிக்காது. தமிழருவி மணியனைப் போல், வேளுக்குடி கிருஷ்ணனைப் போல், எஸ். ராமகிருஷ்ணனைப் போல் பேச முடியாததால் என் பேச்சு எனக்குப் பிடிக்காது. என்னுடைய உடல் மொழி, அசைவுகள், குரல் எதுவுமே எனக்குப் பிடிக்காது. அதன் காரணமாகவும் என் பேச்சை நான் கேட்பதில்லை. கேட்டதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஏப்ரல் 8, 2018 அன்று ஹிப்னாடிக் சர்க்கிளில் நான் பேசிய பேச்சை நான் பலமுறை … Read more

ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி? – மனுஷ்ய புத்திரன்

ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று அளித்த மக்கள் விரோத பேட்டியை தொடர்ந்து காலாவை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினேன். காலாவை தோற்கடிப்பதாக நினைத்து ரஞ்சிதை தோற்கடித்துவிடாதீர்கள் என்ற அழுகுரல்கள் ஒரு புறம். ரஜினியை தோற்கடித்து ரஞ்சித்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற போர்தந்திர அறைகூவல் இன்னொரு புறம். தூத்துக்குடியில் மக்கள் செத்ததைவிட காலா தோற்றுவிடக்கூடாது என்ற பதட்டம் பலரிடமும் இருக்கிறது. தூத்துக்குடி பிரச்சினையில் காலாவை கொண்டுவரக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் காவிரிக்காக ஐ.பி.எல் லை துரத்தியதை ஆரவாரமாக ஆதரித்தவர்கள். ஐ.பி.எல் … Read more

ரஜினியும் பூர்ணம் விஸ்வனாதனும் – அராத்து

இது அராத்து எழுதியது. நானும் எழுதியதாகக் கொள்ளவும். ரஜினியும் பூர்ணம் விஸ்வனாதனும் ரஜினியின் இந்த பேட்டியைப் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைபவர்களைப் பார்த்தால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதுதான் ரஜினி ! இந்த வகையான ஆளுமையைத்தானே அவர் இவ்வளவு நாளும் வெளிப்படுத்தி வந்தார் ! இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது ? ரஜினி இப்படித்தான் பேசுவார். “உளறுவார்” என்றுதான் எழுத நினைத்தேன் ! ஆக அதிர்ச்சி அடைபவர்கள் ,அவரிடம் பெரிதாக ஏதோ எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள் போல … Read more

அரசு எந்திரத்தின் அடியாள் ரஜினி

……. தூத்துக்குடியில் ரஜினி சற்றுமுன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு அவர் ஒரு அரச பயங்கரவாதத்தின் கொள்கைப் பிரச்சாரகர் என்பதையும் மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் ஒரு சமூக விரோதி என்பதையும் மறுபடி நிரூபித்திருக்கிறார். காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்குப்பதில் ‘ காவல் துறை மேல் கல்லெறிந்தவர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு’ அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டவேண்டும் என்கிறார். போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று எடப்பாடி- சங்கி கும்பல் எடுக்கும் வாந்தியை மறுபடி எடுக்கிறார். தமிழகத்தில் … Read more

பூலோக சொர்க்கம்

ஃப்ரான்ஸின் தென்பகுதியில் தோர்தோன்யே (Dordogne) என்று ஒரு கிராமம் உள்ளது.  பூலோக சொர்க்கம்.  அந்த சொர்க்கத்தில் மேலும் அற்புதம் செய்திருக்கிறார் வியத்நாமிய ஜென் குரு Thich Nhat Hanh.  அங்கே யார் வேண்டுமானாலும் ஒரு வாரம் போய் தங்கலாம் (Retreat).  திச் நாட் ஹானின் இணைய தளம்: https://plumvillage.org/

நிலவு தேயாத தேசம் – எதிர் பதிப்பகம் – அனுஷ்

எங்கள் புத்தக நிலையத்திற்கு விற்பனைக்கு வரும் பிற பதிப்பகங்களின் எல்லா புத்தகங்களையும் விரிவாகப் பார்க்க முடியாவிட்டாலும் ஏறக்குறைய பெரும்பாலான புத்தகங்கள் என்ன பிரிவை சேர்ந்தது, அதன் எழுத்தாளர், விலை, பதிப்பகம் என அவற்றைப் பற்றிய குறிப்புகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பேன். அப்படித்தான் இரு மாதங்களுக்கு முன் Zero Degree Publishing பதிப்பகத்திலிருந்து சில தலைப்புகளில் புத்தகங்கள் வந்திருந்தன. அவற்றை பார்த்துக்கொண்டிருந்தபோது சாரு நிவேதிதாவின் நிலவு தேயாத தேசம் என்னும் பயணக் கட்டுரை நூலை கவனித்தேன். நல்ல … Read more