பேச்சு – 2

நேற்று இரண்டு கட்டுரைகள் எழுதினேன்.  அதில் ஒரு கட்டுரை மட்டும் ஐந்து மணி நேரத்தை எடுத்துக் கொண்டது.  இசை பற்றிய கட்டுரை.  கேட்ட பாடல்களாக இருந்தாலும் அது பற்றி எழுதும்போது மீண்டும் கேட்க வேண்டும் அல்லவ இன்னொரு கட்டுரை, ஆத்மாவின் குமுறல்.  இரண்டையும் பற்றி யாரிடம் பேசுவது?  பேச யாரும் இல்லை.  எழுதி முடித்து ஒன்றிரண்டு மணி நேரம் சென்ற பின் ஒரு நண்பரை அழைத்தேன். இன்னும் படிக்கவில்லை என்றார்.  இன்று காலை அழைத்தேன்.  வேறு ஏதோ … Read more

பேச்சு

தெரியாத மனிதர்களிடம் நான் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.  ஒரு நண்பர் சமீபத்தில் சொன்னார்.  அவர் வீட்டுக்கு வந்த அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அரை மணி நேரம் இடைவெளியே இல்லாமல் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறார். ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே என் நண்பருக்கு அவர் என்ன பேசுகிறார் என்றே ஒரு வார்த்தை கூட மனதில் பதியவில்லை. வெறுமனே தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தாராம். ஜெயமோகன் ஒருமுறை தன் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது நண்பரின் அண்டை வீட்டுக்காரர் இவரிடம் வந்து பல மணி … Read more

தமிழ் எழுத்தாளன்

இப்போது என்னால் ஒரு அமெரிக்க, ப்ரிட்டிஷ் எழுத்தாளரைப் போலவே வெகு சரளமாக ஆங்கிலத்தில் நாவலோ சிறுகதையோ எழுத முடியும். சில பிழைகள் இருக்கும். அதை ஒரு எடிட்டரால் சரி செய்து விட முடியும். இதற்கு நான் செயற்கை நுண்ணறிவை நாடுவதில்லை. அந்த எந்திர மொழிபெயர்ப்பினால் இலக்கிய உலகில் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் நாலு வாக்கியத்தை எழுதி அதை செயற்கை நுண்ணறிவால் மொழிபெயர்த்து பதிப்பகத்திடம் கொடுத்தால் ஒரு நிமிடத்தில் அது செயற்கை நுண்ணறிவு என்று கண்டு பிடித்து … Read more

அய்யப்ப மாதவனின் கவிதைகளும் ஒரு மெட்டல் ராக் பாடலும் (2)

பாடலை உங்களுக்குக் கொடுக்க மறந்து விட்டேன். இரண்டு வித பாடல்கள் உள்ளன. எனக்குப் பிடித்த பாடல் இது: Verse 2 She’s gone Out of my life Oh, she’s gone I find it so hard to go on I really miss that girl, my love Come back into my arms I’m so alone I’m begging you Chorus Lady, won’t you save … Read more

அய்யப்ப மாதவனின் கவிதைகளும் ஒரு மெட்டல் ராக் பாடலும்

Tommy Johansson – ஸ்வீடிஷ் பாடகர். இவருடைய “She’s Gone” என்ற பாடலை கிட்டத்தட்ட ஆயிரம் முறை கேட்டிருப்பேன். தினந்தோறும் நடைப் பயிற்சியின்போது திரும்பத் திரும்பக் கேட்பது இந்த ஒரு பாடலைத்தான். இந்தப் பாடலை டாமி ஜோஹான்சன் 2022இல் வெளியிட்டார். ஆனால் இதன் அசல் வடிவம் ஸ்டீல்ஹார்ட் என்ற குழுவினால் 1990இல் வெளிவந்தது. இந்தக் குழுவில் இந்தப் பாடலை முதலில் பாடியவர் குரோஷியாவைச் சேர்ந்த Miljenko Matijevic. இப்போதும் ஸ்டீல்ஹார்ட் குழுவின் பிரதான பாடகராகத் தொடர்ந்து இயங்கி … Read more

ரோஷ்ணியின் கொடுங்கனா

என் பெயர் ரோஷ்ணி என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.  தலைப்பிலேயே என் பெயர் வந்து விட்டது.  நான் கண்ட கொடுங்கனாவுக்குள் செல்வதற்கு முன்னால் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். என் வயது இருபத்தாறு.  திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன.  குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற தீவிரமான முடிவில் இருக்கிறேன்.  அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இது நாவலாகப் போய் விடும்.  அது இப்போது நமக்குத் தேவையில்லை.  எப்போதாவது நான் ஒரு நாவல் எழுதினால் அதற்காக இந்த … Read more