9. மரணமிலாப் பெருவாழ்வு

9. மரணமிலாப் பெருவாழ்வு என் பெயர் குறிப்பிடாமல் என்னை அவதூறு செய்யும் ஒரு ஃபேஸ்புக் குறிப்பைக் கண்டேன்.  அதில் ஒரு வாக்கியம் வருகிறது.  “நிஜமான கலை என்பது அடுத்தவர் கண்ணியத்தை சிதைப்பதல்ல, மாறாக, நம்முள்ளே இருக்கும் சிறுமைகளைச் சிதைப்பதாகும்.” பெல்ஜியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  லியோபோல்ட் II (King Leopold II of Belgium).என்று ஒரு மன்னன் இருந்தான்.  இவன், “மனிதாபிமானம், நாகரீகம், கண்ணியம்” என்ற பெயரில் ஆஃப்ரிக்காவில் காங்கோ நாட்டை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக்கினான். உலக … Read more

Categories Uncategorized

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நான் எழுதிய எக்ஸைல் நாவல் வெளிவந்தது. அப்போது ஓர் அதிசயம் நடந்தது. முன்பதிவு செய்வதற்கு விளம்பரம் வந்ததும் ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஒரு மாதம். எனக்கு இப்போதும் அது கனவு போலவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது. அடுத்த மாதம் புத்தக விழா. அதற்குத் தேவையான பிரதிகளை மறுபடியும்தான் அச்சிட்டார்கள். மொத்தமே இரண்டாயிரம் பிரதிகள்தான் விற்றன. ஆனால் முதல் பதிப்பு ஒரே மாதத்தில் ஆயிரம் பிரதிகள். அதிசயம் … Read more

Categories Uncategorized

8. நெக்ரொஃபீலியா

(சென்ற கட்டுரைகளின் தொடர்ச்சி. இது இறுதிப் பகுதியாக இருக்குமா இல்லை, தொடருமா என்பது மற்றவர் கரங்களில்தான் இருக்கிறது.) நெக்ரொஃபீலியா பற்றித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் என்ற சிறுகதையை எழுதினேன்.  அதற்குப் பிறகும் நெக்ரொஃபீலியா பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இப்போதும் சௌம்யா செய்த காரியம் நெக்ரொஃபீலியா பிரிவில்தான் வரும். ”விட மாட்டீர்கள் போலிருக்கிறது”  என்று தன் கடிதத்தைத் தொடங்குகிறார் சௌம்யா. இதற்கு ஒரு கதை இருக்கிறது.  சென்ற ஆண்டு ஒரு … Read more

Categories Uncategorized

நடனம், நெறிமுறை, மற்றும் நிஜத்தின் பாலைவனம்

ஒருவர் எழுபத்து மூன்று வயதில் பப்பில் நடனம் ஆடுகிறார். மற்றொருவர் அதை யூட்யூபில் பார்த்து நடனம் ஆடியவரைப் பரிகசிக்கிறார். இது ஒன்றும் புதிய காட்சி அல்ல. ஆனால் அதற்குப் பிறகு நிகழும் விஷயம்தான் சுவாரசியம். முதலில் ஒருவர் அந்த மனிதனைப் பரிகசிக்கிறார். பின்னர் அந்த மனிதன் எதிர்வினை ஆற்றினால் “என் கண்ணியத்தைக் குலைக்கும் வன்மமான செயல்” என்ற பதில் தாக்குதல் வருகிறது. ஜான் பொத்ரியார் ஒருமுறை “Desert of the Real” என்ற ஒரு வினோதமான சொற்றொடரைப் … Read more

Categories Uncategorized

இரண்டு எதிர்வினைகள்

சார் வணக்கம்.விட மாட்டீர்கள் போலிருக்கிறது. ‘சாணி மிதிப்பது’ என்று சொன்னதற்கு பல முறை மன்னிப்பு கேட்டாயிற்று. ஃப்ரான்பர்டிலும் நீங்கள் அனுப்பிய வாய்ஸ் நோட்டிற்கு பதில் சொல்லி மாய்ந்து போனேன். சரி! இனி இது நிற்காது. பழகிக் கொள்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.“சுரணையுணர்வு பற்றி நீட்டி முழக்கியிருக்கிறீர்களே, ஆனால் பொதுவெளியில் ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பும் முன், அந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்ற அடிப்படை உண்மையை சரி பார்க்கும் ‘சுரணை’ ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டாமா?அரவிந்தன் … Read more

Categories Uncategorized