சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நான் எழுதிய எக்ஸைல் நாவல் வெளிவந்தது. அப்போது ஓர் அதிசயம் நடந்தது. முன்பதிவு செய்வதற்கு விளம்பரம் வந்ததும் ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஒரு மாதம். எனக்கு இப்போதும் அது கனவு போலவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது. அடுத்த மாதம் புத்தக விழா. அதற்குத் தேவையான பிரதிகளை மறுபடியும்தான் அச்சிட்டார்கள். மொத்தமே இரண்டாயிரம் பிரதிகள்தான் விற்றன. ஆனால் முதல் பதிப்பு ஒரே மாதத்தில் ஆயிரம் பிரதிகள். அதிசயம் இல்லையா?
இப்போது இன்னொரு அதிசயம். ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற என்னுடைய ஆட்டோஃபிக்ஷன் நாவல் இன்றோ நாளையோ வெளிவர உள்ளது. முன்பதிவுக்குப் பத்து பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள். பத்தே பேர். என்னுடைய வாட்ஸப் தொடர்பிலேயே முந்நூறு நண்பர்கள் உள்ளனர். ஆனால் முன்பதிவு செய்தது பத்து பேர்.

ஒவ்வொரு புத்தகத்தையும் க்ரியா பதிப்பக நூல்களின் தரத்தில் கொண்டு வர வேண்டும் என்பது ராஸ லீலா பதிப்பகத்தின் விருப்பம். என் விருப்பம். அதற்காக அதிகப்படியான செலவு ஆகிறது. ஆனாலும் அந்த அதிகப்படி செலவை புத்தக விலையில் சேர்க்கவில்லை. என் புத்தகங்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறார் ராஸ லீலா பதிப்பகத்தின் வர்ஷா. இதற்கு நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டாமா?
ஆனாலும் ஜோடிப்புறாவை பிடிஎஃப்-இல் வாங்கிய என் நண்பர்களுக்கு நன்றி. ஆனால் அப்படி வாங்கியவர்கள் நூறு பேர்தானே? இன்னும் ஒரு நானூறு ஐநூறு பேராவது நாவலை வாங்க வேண்டாமா? மேலும், பிடிஎஃப்-இல் அனுப்பிய பிறகும் நாவலில் நான் நூறு பக்கங்களுக்கு மேல் சேர்த்திருக்கிறேன். திட்டமிட்டுச் செய்ததில்லை. நாவலை முடித்த பிறகும் மீண்டும் மீண்டும் சேர்த்துக்கொண்டே இருப்பது என் பழக்கம். ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுத்தான் பதிப்பகத்துக்கு அனுப்பினேன். அனுப்பிய பிறகு இரண்டு அத்தியாயங்கள் எழுதினேன். அதற்குள் நூல் அச்சகத்துக்குப் போய் விட்டது. அதனால் அந்த இரண்டு அத்தியாயங்களையும் அடுத்த நாவலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஜோடிப்புறா நாவலை வாங்க முயற்சியுங்கள்.
வணக்கம்….
நமது ராஸலீலா பதிப்பகத்தின் அடுத்த புத்தகமான ஜோடிப் புறாவை எங்கே காணோம்? நாவல் இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது…*
முன் பதிவு செய்து கொள்பவர்கள் WhatsApp :7339680708 எண் (அல்லது )raasaleelapathippagam@gmail.com இ-மெயில் மூலம் முன் பதிவு செய்துக் கொள்ளலாம் ….
*புத்தகத்தின் விலை – 660 RS தள்ளுபடி 5% ( -) 33 Rs
மொத்தம்-627 ரூபாய் .கூரியர் கட்டணம் *(ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு 80 ரூபாய் பிற மாவட்டங்களுக்கு 100 ரூபாய் )
புத்தகத்தை முன்பதிவு செய்ய விரும்பும் நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண் :A/c No: 25840200001634
IFSC CODE: FDRL0002584
ACCOUNT NAME: RAASA LEELA PATHIPPAGAM
(அல்லது )Google pay number-7339680708
புத்தகத்திற்கான தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.முன்பதிவு செய்த ஒரு வாரத்தில் புத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம் . . . .
ராஸலீலா பதிப்பகம்
வர்ஷா தேவி குணசேகரன்
பவானி.