அய்யப்ப மாதவனின் கவிதைகளும் ஒரு மெட்டல் ராக் பாடலும்

Tommy Johansson – ஸ்வீடிஷ் பாடகர். இவருடைய “She’s Gone” என்ற பாடலை கிட்டத்தட்ட ஆயிரம் முறை கேட்டிருப்பேன். தினந்தோறும் நடைப் பயிற்சியின்போது திரும்பத் திரும்பக் கேட்பது இந்த ஒரு பாடலைத்தான்.

இந்தப் பாடலை டாமி ஜோஹான்சன் 2022இல் வெளியிட்டார். ஆனால் இதன் அசல் வடிவம் ஸ்டீல்ஹார்ட் என்ற குழுவினால் 1990இல் வெளிவந்தது. இந்தக் குழுவில் இந்தப் பாடலை முதலில் பாடியவர் குரோஷியாவைச் சேர்ந்த Miljenko Matijevic. இப்போதும் ஸ்டீல்ஹார்ட் குழுவின் பிரதான பாடகராகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

டாமி மற்றும் மில்ஜென்கோ மாடிஜெவிக் (மில்ஜென்கோவின் செல்லப் பெயர் மிலி) இருவரின் பாடலையும் கீழே தருகிறேன்.

மிலி:

டாமி: (பார்வையாளர்கள் மத்தியில் பாடியது)

டாமி (கவர்) (ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்தது):

கவர் என்பதன் பொருள் இசை ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன். கவர் என்பது அசல் பாடலை வேறு ஒருவர் மீண்டும் பாடுவது. ஷீட் ம்யூசிக் என்பது பாடலின் எழுதப்பட்ட இசைக் குறிப்பு.

She’s gone பாடலின் ஷீட் ம்யூசிக் வடிவம் (பியானோவில்):

https://musescore.com/user/1858001/scores/6138324

மற்றொரு ஷீட் ம்யூசிக் வடிவம் – பியானோ:


மில்யென்கோ மாதியெவிச் பாடிய அசல் வடிவத்தை விட டாமி ஜொஹான்ஸன் பாடியதே இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. எனக்கும் அப்படியே. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

மிலியின் குரல் கரகரப்பாகவும், உணர்ச்சி மிகுந்தும் இருக்கிறது. டாமியின் குரல் மிக சுத்தமாகவும், வலுவாகவும், அதிக நீட்சியை எட்டக்கூடியதாகவும் இருக்கிறது. மிலியிடம் உயர் நோட்டுகள் சற்று கடினமாக இருக்கின்றன. ஆனால் டாமியிடம் அவை சக்தி வாய்ந்ததாகவும், தெளிவாகவும் உள்ளன. உணர்ச்சித் தெறிப்பில் மிலியின் குரல் தூக்கலாக இருந்தாலும், அது தொண்ணூறுகளின் ஹேர் மெட்டல் ராக் குழுக்களின் பொதுவான பாணி என்றே சொல்ல வேண்டும்.

ஹேர் மெட்டல் என்பது ஹெவி மெட்டலைப் போன்றதுதான், ஆனால் சில வித்தியாசங்கள் உண்டு. ஹேர் மெட்டல் என்ற பெயர், இந்தக் குழுக்களைச் சேர்ந்த கலைஞர்கள் அனைவரும் மிக நீண்ட முடி வைத்திருந்ததால் வந்தது.

Heavy Metal பாடல்கள் பெரும்பாலும் மரணம், போர், இருள் போன்ற கனமான மற்றும் aggressiveஆன கருப்பொருள்களைக் கொண்டிருந்தன. உதாரணம்: Black Sabbath, Metallica, Iron Maiden, Judas Priest.

ஹேர் மெட்டல் என்பதும் ஹெவி மெட்டல் குழு போன்றதுதான். ஆனால் சிறிய வித்தியாசம் உள்ளது. ஹேர் மெட்டல் என்பது காரணப் பெயர். இந்தக் குழுக்களைச் சேர்ந்த கலைஞர்கள் அனைவரும் மிக நீண்ட முடி அல்லது கூடை மாதிரி முடி வைத்திருந்ததால் அந்தப் பெயர் வந்தது.

Heavy Metal என்பது மரணம், போர் போன்ற இருண்மையான, கனமான, aggressiveஆன, சில சமயம் இருண்ட கருப்பொருள்களைக் கொண்டவை. உதாரணம்: Black Sabbath, Metallica, Iron Maiden, Judas Priest.

Hair Metal (Glam Metal): இந்தப் பாணியில் மிகவும் catchy மற்றும் poppy (கேட்க எளிதானது). Power ballads (மென்மையான உணர்ச்சிப் பாடல்கள்) அதிகம். தோற்றத்தில் flashy மற்றும் glamorous. உதாரணம்: Steelheart (“She’s Gone”), Poison, Mötley Crüe, Bon Jovi, Def Leppard, Cinderella, Whitesnake.

மில்ஜென்கோ மாடிஜெவிக்சின் அசல் பாடல் மற்றும் டாமி ஜோஹான்சனின் கவர் இரண்டையும் ஒப்பிடும்போது, டாமியின் கவர் பாடலே பலருக்கு அசலை விடச் சிறந்ததாகத் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், டாமியின் பாடலில் ஒருவித சிம்ஃபனிக் மற்றும் ஆபரா தன்மை இருப்பதுதான்.

இதற்குக் காரணம், டாமியின் பிரம்மாண்டமான, சக்திவாய்ந்த குரல், நாடகத்தன்மை மிகுந்த பாடும் முறை, உயர்ந்த நோட்டுகளை முழு சக்தியுடனும் உணர்ச்சித் தெறிப்புடனும் பாடுவது மற்றும் கிளாசிக்கல் ஆபரா பாடகர்களைப் போன்ற grand மற்றும் powerful பாணி./

இதை சாத்தியப்படுத்துவதற்காக டாமி நவீன தொழில்நுட்பத்தையும் முழு அளவில் பயன்படுத்துகிறார்.
உதாரணமாக, Rich orchestral layers ஐச் சேர்த்து பாடலின் பின்னணியை மிக பிரம்மாண்டமாகவும், உணர்ச்சிகரமானதாகவும் ஆக்குவதைக் குறிப்பிடலாம். இதற்காக அவர் 8DIO Majestica 2.0 sample library என்ற premium orchestral library-யைப் பயன்படுத்தினார்.

இந்த library epic, cinematic, மற்றும் symphonic music தயாரிப்பதற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் real strings, brass, choirs மற்றும் பல orchestral instruments ஆகியவற்றின் high-quality recorded samples உள்ளன. இதனால்தான் பாடலின் பின்னணி இசையைக், கேட்கும்போது நமக்கு மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தைக் கேட்பது போன்ற grandஆன sweeping உணர்வு ஏற்படுகிறது.

She’s gone பிடித்திருந்தால் உங்களுக்கு அதே போன்ற வேறு சில பாடல்களைப் பரிந்துரைக்கிறேன்.

1.Still Loving You – Scorpions மிக அழகான power ballad, உணர்ச்சி நிறைந்த vocals + orchestral பின்னணி

2. Alone – Heart மிக உயர்ந்த நோட்டுகள் + raw emotion, Tommy அற்புதமாக பாடியிருக்கிறார்

3. Child In Time – Deep Purple. Epic, long high notes, powerful screaming vocals

4. The Phantom of the Opera: நாடகீயமான ஆபரா பாணி. டாமியின் ஆழமான ஆபரா குரல்.

5. Dream On – Aerosmith Emotional build-up + high notes. மிகவும் பிரபலமான பாடல்.

6. Take On Me – a-ha (Metal version) Fun & energetic.

இப்போது She’s gone என்ற மெட்டல் ராக் பாடலுக்கும் அய்யப்ப மாதவனின் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு டாமியின் she’s goneஐக் கேட்கும் போதெல்லாம் அய்யப்ப மாதவனின் கவிதைகள் ஞாபகம் வருகின்றன. அதே உணர்வெழுச்சி. அதே வேகம். அதே கருப்பொருள். ஆனால் She’s gone என்ற இந்த ஆங்கில ராக் பாடல் அவள் பறந்து போனாளே, அவளா சொன்னாள் போன்ற தமிழ் சினிமா பாடல்களை விடவும் சாதாரண பாடல்தான். ஆனாலும் இந்தப் பாடலை ஒரு மேம்பட்ட கலை அனுபவமாக மாற்றுவது டாமியும், அந்தக் குழுவின் கிதாரும், மற்ற பின்னணி இசைக்கருவிகளும்தான்.

அய்யப்ப மாதவனின் கவிதைகளை இங்கே கொடுக்கவில்லை. நீங்களே இணையத்தில் தேடிப் படிக்கலாம். அதைவிட நலம் புத்தகமாகவும் வாங்கிப் படிப்பது.