சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

மொழி

நமனை அஞ்சோம் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடுத்த படியாக, இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பு தயாராகி வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் என்னுடைய பத்து புத்தகங்கள் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளன. இப்போது ”மொழி” என்ற தலைப்பில் அமைந்த என் கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் பிச்சைக்காரனின் ஒரு கடிதமும் அதற்கான என் பதிலும் உள்ளன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹாய் சாரு.. பைபிள் படித்து கொண்டு இருந்தேன். … Read more

இது என்ன மடமா?

டியர் சாரு, சற்று முன்பு நீங்கள் எழுதியிருந்த முற்பகல் செய்யின் படித்தேன். ஒரு சந்தேகம். உங்களிடம் உரையாடல் சாத்தியம் என்பதால் மட்டுமே இதைக் கேட்டு எழுதுகிறேன். இதற்கும் நீங்கள் மன உளைச்சலாகி விட்டால் அப்புறம் எனக்கு அந்தப் பழி வந்து சேர்ந்து விடும். உங்கள் நண்பர் (நண்பி?) சொன்னது போல், நானும் ஏற்கனவே எக்கச்சக்கமான சாபங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். விமோசனத்துக்குத்தான் வழியில்லை. இதை என்னுடைய சந்தேகம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். மன உளைச்சல் வேண்டாம். விஷயத்துக்கு … Read more

முற்பகல் செய்யின்… (மேலும் சேர்த்திருக்கிறேன்)

மேற்கண்ட முதுமொழியில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் தொடர்ந்து படியுங்கள். ஏனேன்றால், இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க மூட நம்பிக்கை எனக் கருதப்படும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்படுகிறது. பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், தர்க்கத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை. அகோரா என்ற மூன்று தொகுதிகள் கொண்ட புத்தகத்தில் விமலானந்தா என்று ஒரு அகோரி வருகிறார். அவருக்கு காளி எதிர்காலத்தையும் அறியும் சக்தியை அளிக்கிறாள். அதன் காரணமாக, உயிருக்கு உயிராக நேசித்த அவர் மகன் ஒன்பது வயதிலேயே … Read more

மக்கள் விரோதப் போக்கு

சுருக்கமாகச் சொல்கிறேன். திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைத்தால் அதைவிடப் பெரிய ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி நடந்தால் தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திமுக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்ற அஹிம்சைப் போராட்டம் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்கவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மறுதேர்தல் நடந்தால் தவேகவுக்கு 180க்கு மேற்பட்ட சீட்டுகள் கிடைக்கும் என்பதை என்னால் அறுதியிட்டுச் … Read more

PTSD

(ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் விரைவில் வெளிவர இருக்கும் இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.) 1 நான் புகுமுக வகுப்பில் ஐந்து சப்ஜெக்டுகளிலும் தோல்வி அடைந்தேன். தமிழ், ஆங்கிலம், கணிதம், பௌதிகம், ரசாயனம். நான்கு சப்ஜெக்டுகளில்தோல்வி என்றால் புரிகிறது. பிற்காலத்தில் ஒரு பேர் பெற்ற தமிழ்எழுத்தாளனாக உருவான நான் ஏன் தமிழிலும் தோல்வி? மிக எளியகாரணம்தான். நான்கிலும் தோல்வி என்பது தேர்வுக்கு முன்னரே தெரிந்து விட்டதால் தமிழையும் சரியாக … Read more