கோவை புத்தகக் கண்காட்சி

கோவை புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்- 173, 174) மற்றும் உயிர்மை (அரங்கு எண்- 80) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: கொடிஸியா வளாகம், கோவை – ஸ்ரீராம்  

ஜி. கார்ல் மார்க்ஸ் மீண்டும்… விநாயக முருகனும்…

முகநூலில் பார்த்த பதிவு. ஜி. கார்ல் மார்க்ஸ்: முந்தைய பதிவில் ‘சராசரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தேன். அந்த வார்த்தையை யாரையும் காயப்படுத்தும் நோக்கிலோ அல்லது அவமதிக்கும் நோக்கிலோ சொல்லவில்லை. இதன் பின்னுள்ளது ஒரு சலிப்பு. நமது பொதுபுத்தி, அறிவுஜீவித்தனத்துக்கு எதிராக கொண்டிருக்கிற மூர்க்கத்தின் மீதான எரிச்சல் அது. ஒரு உதாரணத்துடன் இதைப் பார்ப்போம். உங்களுக்கு தினமும் காலையில் எழுந்தவுடன் பத்து கிலோமீட்டர் தூரம் ஓடுகிற பழக்கம் இருக்கிறது. நல்ல பழக்கம்தான் அது. அதற்காக உசைன் போல்ட்டைப் பார்த்து, … Read more

தமிழ் ஸ்டுடியோவின் B.லெனின் விருது வழங்கும் விழா – 2016 – சிறப்பு விருந்தினர் அறிமுகம்

அனுராக் காஷ்யப் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு சினிமா சார்ந்த தளங்களில் பயணிப்பவர். உலகெங்கிலும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் குரலாக ஒலிப்பவர். ஒரு திரைப்படம் எடுத்துவிட்டால் அத்துடன் தங்களது கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் பெரும்பாலான படைப்பாளிகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு உலகில் நடக்கும் அதிகம் அறியப்படாத பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்திய திரைப்படம் என்றாலே அனுராக் என்கிற அளவிற்கு தன்னுடைய படங்களை எல்லா திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைத்து அதற்குரிய நியாயத்தை … Read more

ஜோக்கர்

உனது துன்பங்களுக்கு நீயேதான் காரணம். -ஸ்வாமி விவேகானந்தர். …கரெக்ட் ஸ்வாமீ. நானாதான் ஜோக்கர் படத்துக்குப் போனேன். எனக்கு நல்லா வேணும். இது பத்தாது ஸ்வாமீ… பிரபு காளிதாஸ்

நா. முத்துக்குமாரின் மரணம் தொடர்பாக…

ஒவ்வொரு கவிஞனும் அகால மரணம் அடையும் போது சில சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள் குடிப்பதன் தீமைகள் பற்றி உபதேசம் செய்கிறார்கள்.  கலை, இலக்கியம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத அந்த மூடர்களுக்கு நண்பர் கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கும் பதிலை கீழே தருகிறேன்.  இதனால் எல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் குடித்து அழியுங்கள் என்று நான் சொல்லவில்லை.  ஆனாலும் அளவும் நிதானமும் வேண்டும் என்று நினைக்கிறேன்.  அது வேறு; பொதுநல விரும்பிச் சராசரி மொண்ணைகளின் உபதேசம் வேறு.  மேலும், … Read more

தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது வழங்கும் விழா – 2016

  தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது 2016 பெறுபவர்: தீபா தன்ராஜ் 20-08-2016, சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு. பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வழக்கமாக நிகழ்வுகள் நடைபெறும் பிரசாத் பிரிவியூ திரையரங்கம் அல்ல, பிரிவியூ திரையரங்கிற்கு அடுத்துள்ள பிரசாத் ரெக்கார்டிங் திரையரங்கில்) தொடர்புக்கு: 9840698236 சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆய்வாளர் வ. கீதா சாரு நிவேதிதா இயக்குனர் லீனா … Read more