அன்பு: ஒளி முருகவேள்
நாவல் முழுவதும் அன்பினால் ஏற்படும் ரணங்கள் இருந்தாலும், பெருமாளை வலிகள் வாட்டு வாட்டென்று வாட்டினாலும் சாருவின் வசீகர எழுத்து நடையால் பக்கத்துக்கு பக்கம் சிரிப்பை அடக்க முடியவில்லை. சோகத்தைக்கூட கொண்டாட்டமாய் சொல்லும் அவரது மொழி நம்மை கட்டிப்போடுகிறது. அதுவே அவரது வாழ்வின் தத்துவமாகவும் நமக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. நான் ரசித்துப் படித்த ராஸ லீலாவிற்குப் பிறகு சாருவின் ராட்சஸ விஸ்வரூபம் இது. இதை வாசிக்கம்போது சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. சாப்ளினின் நகைச்சுவை கலந்த … Read more