NFT இன்னும் கொஞ்சம்

இரண்டு விஷயங்கள்: என்.எஃப்.டி. மூலம் வாங்கும் நூல் ஒரு டிஜிட்டல் அஸெட் என்பதால் இப்போது பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் நூல் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கூட விற்கலாம். காரணம், இந்தியாவின் முதல் என்.எஃப்.டி. நூல் அராத்துவின் நோ டைம் டு ஃபக். இரண்டாவது, அந்த நெடுங்கதையைப் படித்து விட்டு நான் என்ன சொன்னேன் என்பதை அந்த நெடுங்கதைக்கு ஒரு சிறிய முன்னுரையாக எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதுவும் அந்த டிஜிட்டல் நூலில் உள்ளது.

NFT – அராத்து – டிஜிடல் புரட்சி

அராத்து எழுதிய நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை என்.எஃப்.டி. மூலம் முதல் பிரதி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது.  அதுவும் விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களில்.  அடுத்த பிரதிகளின் விலை பத்தாயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.  அதுவும் மிண்ட் பண்ணி இரண்டு தினங்களில் விற்றன.  இதுவரை பத்து பிரதிகள்.  ஆனால் என்.எஃப்.டி.யில் நூல் விற்பனை என்பது நான் நினைத்தது போல் அத்தனை சுலபம் அல்ல போல் தெரிகிறது.  நூலை வடிவமைக்க (வடிவமைப்பு மற்றும் இசை) இரண்டு … Read more