சிறுகதைகள்: சாரு பேருரை

நாளை ஆரோவில்லில் சிறுகதைகள் பற்றி சாரு நிவேதிதா பேருரை ஆற்றுவார். காலை பத்து மணிக்கு சிறுகதைப் பட்டறை. நண்பகல் பன்னிரண்டு மணியளவில் சிறுகதைகள் குறித்த சாருவின் பேருரை. அனுமதி இலவசம். அனைவரும் வருக. நிகழ்வு நடக்கும் இடத்தின் கூகுள் மேப்: https://maps.app.goo.gl/k3hvBhht11rJUhzQA

அன்பு நாவல் ஒரு நண்பரின் வாழ்க்கையில்…

அன்பு நாவலில் மூன்று நண்பர்கள் காரில் ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பார்கள். சேலம் பக்கத்தில் ஒரு அசைவ மெஸ் வரும். அங்கே சாப்பிட வேண்டாம் என்பார் ஒரு நண்பர். மற்ற இருவரும் அங்கே சாப்பிட விரும்பியும் ஏதோ ஒரு பவனில் சைவ உணவு உண்பார்கள். மூவரில் பெருமாள் ஒருத்தன். அவனுக்கு எப்போதெல்லாம் பவனில் சைவம் சாப்பிட்டாலும் வயிற்று வலி வந்து விடும். தவறினதே இல்லை. அன்றைய தினமும் வந்தது. அன்பு நாவல் எழுதியதற்கு அந்த வலியே ஆரம்பப் … Read more

கற்றுக் கொண்டது…

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு, வைதேகி, கொக்கரக்கோ, உலகளந்தான், பச்சைக்கண், தண்ணீர், அரக்கோணம், பூனை, ஆடு, அமைப்பு முக்கியமாக “போடீ சு**” இவை அனைத்தும் நான் படித்து முடித்த பன்னிரண்டு மணி நேரத்தில் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் வார்த்தைகள். வைதேகி – அன்பின் நேர்மறையும் எதிர்மறையும்.  கொக்கரக்கோ – இவ்வளவு தானே, இதுக்கேன்டா இவ்வளவு பொங்குறீங்க? அன்போ அறிவோ சரியா வேலை செஞ்சாதான்டா முழுமையாகும். உணர்ச்சியால் பொங்கி ஏன்டா மத்தவன் வாழ்க்கைய நாசமாக்குறீங்க என்கிற ‘Rationality’ன் முகம். … Read more

காதை அறுத்துக் கொடுத்த வான்கோவும் அடியேனும்…

இப்போது நான் இங்கே எழுதப் போவதை அன்பு நாவலைப் படித்த யாரேனும்தான் எழுதியிருக்க வேண்டும். யாரும் எழுதவில்லை. அதனால் நான் எழுதத் துணிந்தேன். மேலும், எது எழுதினாலும் அதை எழுதிய பிறகு அந்த சிருஷ்டி – அந்தப் பிரதி – எழுதிய நபருக்கு அந்நியமாகத்தானே போகிறது? அந்த வகையிலும் இப்போது நான் எழுதுவதை எடுத்துக் கொள்ளலாம். வான்கோ தன் காதலிக்காகத் தன்னுடைய ஒரு காதை அறுத்துக் கொடுத்தான் என்ற செய்தியைக் கேள்விப்படாதவர் இருக்க முடியாது. அந்தச் சம்பவம் … Read more