கலையும் மீறலும்: அண்ணா நூலக உரையாடல்

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக பத்து மணிக்கு கலையும் மீறலும் என்ற தலைப்பில் என்னுடைய பேச்சும் அதைத் தொடர்ந்த உரையாடலும் நடந்தது. நெல்ஸன் சேவியர் ஒருங்கிணைத்தார். லக்ஷ்மி சரவணகுமார் அறிமுக உரை ஆற்றினார். நான் ஒரு இருபது பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு ஐநூறு பேர் இருந்திருப்பார்கள். ஐம்பது நூறு பேர் வேறு நின்று கொண்டிருந்தார்கள். இதற்காக நான் தமிழ்நாடு அரசையும், அண்ணா நூலகத்தின் அதிகாரிகள் அனைவரையும், இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் பாராட்டுகிறேன். குறிப்பாக … Read more

அருஞ்சொல் நேர்காணல் – 3

மூன்றாவது வாரமாக அருஞ்சொல் இதழில் என் பேட்டி வருகிறது. இதைப் படிக்காதவர்கள் என் நட்புப் பட்டியலில் இருந்து விலகலாம். இதுவரை இது போன்ற ஒரு நேர்காணல் வந்ததில்லை. சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)

புத்தக விழா பதிவுகள் – 1

நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன்.  டார்ச்சர் கோவிந்தனைப் பார்க்காத விழா.  சலிப்பாக இருந்த்து.  ஆம், நான் ஒரு மஸாக்கிஸ்ட் என்று நேற்று தெரிந்து கொண்டேன்.  டார்ச்சர் இல்லாத்தால் சலிப்பு.  இனிமேல் நாளையிலிருந்து வர வேண்டாம் என்று நினைத்தபடியே எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மூன்று அழகிகள்.  வயது இருபது இருக்கும்.  உங்களின் தீவிர வாசகிகள் சாரு என்று அறிமுகம்.  தீவிரம் கவர்ந்ததை விட சாரு கவர்ந்தது.  பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பி விட்டார்கள்.  உடனே ஒரு … Read more