பிரார்த்தனை குறித்த கேள்வியும் பதிலும்: சக்திவேல்

அன்புள்ள சாரு உங்களுடைய புதிய நூலாக அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு வந்துள்ளதாக அறிந்தேன். புத்தக விழாவில் நீங்கள் சுருதி டிவிக்கு கொடுத்த சிறு பேட்டி ஒன்றையும் கண்டேன். அன்பு என்ற பேரில் ஒருவனை சமூகம் எப்படியெல்லாம் வன்முறைக்கு உட்படுத்துகிறது என்பதை எழுதியிருப்பதாக கூறியிருந்தீர்கள். நான் இன்னும் நாவலை வாசிக்கவில்லை. இனிமேல்தான் வாங்க வேண்டும். என்னிடம் கடைசியாக வாசிக்காது வைத்திருந்த உங்களுடைய இரு நாவல்களான தேகம், எக்ஸிடென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் ஆகிய நாவல்களை சென்ற வாரத்தில் … Read more

மாதம் ஒரு நூல்…

அநேகமாக உலக அளவில் தேடினாலும் இந்த அளவுக்குத் தரமாகவும் அதிகமாகவும் எழுதுவதற்கு வேறு எங்கும் எழுத்தாளர்கள் கிடைக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே பத்து நூல்கள்தான் எழுதி முடிக்கிறார்கள். இங்கே லோக்கலாக அருந்ததி ராய் ஒரு உதாரணம். ஒரே ஒரு நாவலை வைத்துக் கொண்டே மூன்று பத்தாண்டுகளை ஓட்டி விட்டு இப்போது இரண்டாவது நாவலை எழுதியிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் பூச்சி என்ற தலைப்பில் ஒரு தொடரை தினந்தோறும் எழுதியது உங்களுக்கு … Read more