விஷ்ணுபுரம் விழா நினைவுகள்

விஷ்ணுபுரம் விழாவில் சில விடுபட்ட புகைப்படங்கள் இருந்தன. அதில் இது ஒன்று. முன்வரிசையில் சுபஸ்ரீ, சக்திவேல். பின்வரிசையில் யோகா குரு சௌந்தர், மனோபாரதி.

writer of pop colors…

சினிமா நண்பர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பை விட எழுத்தே எனக்கு எளிது என்று சொன்னாலும் அவர்களே எழுத்தாளராகவும் இருந்து விடுவதால் நடிப்புதான் வேண்டும் என்கிறார்கள். எனக்கு நடிக்கத் தெரியாதே என்று சொன்னால் அது எங்கள் கவலை என்கிறார்கள். ஒரு எழுபது வயது எழுத்தாளனின் மூன்று நாள்களை முழுநீளத் திரைப்படமாக எடுக்கலாம் என்பது என் நெடுநாள் திட்டம். பொழுதுபோக்கு சினிமா அல்ல. படத்தில் வசனமே இருக்காது. வேறு நடிகர்களும் இல்லை. நான்தான் இயக்கலாம் என்று திட்டம். … Read more

வாழ்ந்து பார்த்த தருணம்: வெங்கடசுப்ரமணியன்

வாழ்ந்து பார்த்த தருணம் என்ற தலைப்பில் என் நண்பர் வெங்கடசுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வருகிறார். பின்வரும் கட்டுரை அந்தத் தொடரின் 193ஆவது பகுதி. சென்ற மாதமே எழுதி விட்டார். நான்தான் நேரமின்மையால் பகிர முடியவில்லை. இப்போது அன்பு நாவலை முடித்து விட்டதால் கொஞ்சம் சாவகாசமாக இருக்கிறேன். டிசம்பர் 18 விஷ்ணுபுரம் விழா. அன்றுதான் என் பிறந்த நாளும். நான் என் பிறந்த நாள்களை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடவே விருப்பப்படுவேன். நரகத்தில் உழல்பவர்களுக்குக் கிடைக்கும் கொண்டாட்டம் அது. … Read more