வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு

ஆம், அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற … Read more

அன்பு குறித்து ஒரு புகார் மனு: நாவல்

தேகம் நாவலை இரண்டு வாரத்தில் எழுதி முடித்தேன். கூடவே அராத்து தங்கியிருந்தார். காலடி என்ற ஊரில் ரீஜினுவேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது எழுதியது அந்த நாவல். இப்போது தேகத்தைப் போல் மூன்று மடங்கு பெரிய நாவலை ஒரே வாரத்தில் எழுதி விட்டேன். இப்போது செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அன்பு குறித்து ஒரு புகார் மனு. புத்தக விழாவில் வெளிவரும். இது ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் நாவல். கொக்கரக்கோவின் சேட்டைகள் அதிகம் வரும் நாவல். நாவலின் ஹீரோ கண்ணாயிரம் பெருமாள் … Read more