அன்பு குறித்து ஒரு புகார் மனு: நாவல்

தேகம் நாவலை இரண்டு வாரத்தில் எழுதி முடித்தேன். கூடவே அராத்து தங்கியிருந்தார். காலடி என்ற ஊரில் ரீஜினுவேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது எழுதியது அந்த நாவல். இப்போது தேகத்தைப் போல் மூன்று மடங்கு பெரிய நாவலை ஒரே வாரத்தில் எழுதி விட்டேன். இப்போது செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அன்பு குறித்து ஒரு புகார் மனு. புத்தக விழாவில் வெளிவரும். இது ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் நாவல். கொக்கரக்கோவின் சேட்டைகள் அதிகம் வரும் நாவல். நாவலின் ஹீரோ கண்ணாயிரம் பெருமாள் இல்லை. அவன் சும்மா வந்து வந்துதான் போவான். ஆண்டி ஹீரோ உலகளந்தான் தான் நாவலின் மையமற்ற மையம். வைதேகி, புவனேஸ்வரி என்ற இரண்டு பாத்திரங்கள் பட்டையைக் கிளப்புவார்கள். வினித், செல்வகுமார், குமரேசன் போன்ற பாத்திரங்களும் உண்டு. கொஞ்சம் பொறுங்கள்.