கலையும் மீறலும்: உரையாடல்: அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் எட்டாம் தேதி ஞாயிறு காலை பத்திலிருந்து பதினோரு மணி வரை வாசகர்களுடன் உரையாடுகிறேன். எல்லோரும் திரளாக வரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர். இங்கே பாரதீய வித்யா பவனில் ஆராவமுதாச்சாரியாரின் திருப்பாவை உபந்நியாசம் நிகழ்ந்த போது இரண்டு வார காலம் தினமும் காலை ஏழு மணிக்கு நூறு பேர் வந்தார்கள். இலக்கியத்தில் அல்ல, ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். ஆண்டாளிடம் பக்தி கொண்டவர்கள். அப்படி ஒரு நூறு பேராவது வந்தால் மகிழ்ச்சி … Read more

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு / அருஞ்சொல்

சமஸ் எனக்குப் பிடித்த பத்திரிகையாளர். என்னை ஒரு இருபது பேர் இதுவரை பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் மிகச் சிறந்த பேட்டி ஆங்கில நாவலாசிரியையும் நாட்டியக் கலைஞருமான Tishani Doshi எடுத்தது. Author’s parole என்ற தலைப்பில் அது வெளியாகி இருக்கிறது. அதே பெயரை கூகிளில் போட்டால் அந்தப் பேட்டியை நீங்கள் படிக்கலாம். அதை விட நல்ல பேட்டியாக இதை உருவாக்கியவர் சமஸ். நான் கொஞ்சம் கண்ணாடி மாதிரி. நீங்கள் உளறினால் நானும் உளறுவேன். நீங்கள் நன்றாகப் பேசினால் … Read more