ஒளி முருகவேள்

என் வாழ்வில் ஒரு ஒளியாய்ச் சேர்ந்தவர் ஒளி என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் ஒளி முருகவேள். அவர் ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர். ஒளி என்பது புனைப்பெயர் அல்ல. அவர் தந்தை பெயர் ஒளி என்று ஆரம்பிக்கும். தந்தை மறைமலை அடிகளின் மாணவர். ஒளியைப் போன்ற சாத்வீக மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. செல்வகுமார், குமரேசன் இருவரும் கூட சாத்வீகம்தான் என்றாலும் ஒளி அவர்களை விட சாத்வீகம். என் திட்டுகளையும் கூட சிரித்துக் கொண்டே கேட்டுக் … Read more

வசிய லேகியம்

வசியமருந்துக்காரனொருவனை யதேச்சையாய்க் கண்டேன் ஒரு பெண்ணை வசியப்படுத்த வேண்டுமென்ற நீண்டநாள் ஆசையைச் சொன்னேன் “கவலை வேண்டாம் விலைதான்  கொஞ்சம் அதிகம்” என்றவனிடம் “உயிரையும் கொடுப்பேன் விலையாக மருந்தைக் கொடு முதலில்” என்றேன். நாற்பது மூலிகைககள் சேர்ந்ததிந்த லேகியம் உன் இஷ்ட ஸ்த்ரீயை முத்தமிடுமுன் உதட்டில் இட்டுக் கொள் ஜென்மத்துக்கும் அடிமையென்றான் முதல் சந்திப்பின் முதலாவது முத்தத்தின் போது மறக்காமல் இட்டுக் கொண்டேன் ஏய் வசியக்காரா ஜென்மத்துக்கும் போதுமிந்த முத்தம் இந்த நினைவிலேயே  ஏழேழுஜென்மம் வாழ்ந்து விடுவேன் சொல்லி … Read more

அன்பு நாவல் பற்றிய ஒரு நேர்காணல்

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவல் பற்றிய சிறிய அறிமுகத்தை கேள்வி பதில் மூலமாக நானும் அராத்துவும் நேற்று புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் நிகழ்த்தினோம். அரங்கு எண் எஃப் 19. பல நண்பர்கள் புத்தகம் தபாலில் கிடைக்குமா, ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா என்று கேட்டு எழுதியிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்ய முடியும். புத்தக விலை 340 ரூ. மற்ற விவரங்களை நீங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கே … Read more