புத்தக விழா

ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாவுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டாட்ட மனநிலையும் அதிகரிக்கிறது.  மதுரையிலிருந்தும் இன்னும் பல வெளியூர்களிலிருந்தும் என்னுடைய ஒரு கையெழுத்துக்காக இந்தப் புத்தக விழாவுக்காக வருகிறார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு என் புத்தகங்களை ஒளித்து ஒளித்துப் படித்த சமூகம் இப்போது என் எழுத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. என் நூல்களை வாங்க  இப்போது யாரும் தனியாக வருவதில்லை.  குடும்பத்தோடு வந்து ஸீரோ டிகிரி நாவலை வாங்கிச் செல்கிறார்கள்.  காலம் … Read more

நாலு எழுத்துப் பெயர் கொண்ட நங்கை

நேற்று பொங்கலும் அதுவுமாய் கொஞ்சம் மனம் உடைந்து விட்டது விரிவாகச் சொல்ல வேண்டும் ஆனால் விரிவு கவிதைக்காகாது இரண்டுக்கும் இடையிலாகச் சொல்ல முயற்சிக்கிறேன் புத்தக விழாவில் நுழைகிறேன் ஸ்தம்பிக்க வைக்கும் அழகி ஒருத்தி என்னை நெருங்கி வந்து நான் உங்கள் வெறித்தனமான ரசிகை என்று சொல்லிக் கை குலுக்கினாள் பெயர் சொன்னாள் அழகாக இருப்பதை விட அதற்கேற்ப ஆடை தேர்வது ஒரு கலை இவள் கலைஞி அப்போது அந்தப் பக்கம் போன ஒரு இளைஞனை பம்பரத்தைச் சுண்டி … Read more

இன்னும் ஓரிரு தினங்களில் அன்பு. இப்போது முன்னட்டை ஓவியம்…

எது எழுதினாலும் அதை எழுதி முடித்த பிறகு அதிலிருந்து நான் விலகி விடுவேன். அது வாசகர்களுக்கானது. அவ்வளவுதான். ஆனால் அன்பு நாவலில் அப்படி இல்லை. அதை நான் ஒவ்வொருவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படிக்கச் சொல்லி யாசிக்க வேண்டும். அது என் சுவாசம். என் தவம். அதற்கு நான் பெரிதும் எதிர்பார்த்த அட்டைப் படம் வந்து விட்டது. ஓவியம் மணிவண்ணன். மணி வண்ணனை ஒரு மாணவராக எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு தெரியும். சந்த்ரு வீட்டில் … Read more

உடலும் பயிற்சியும்

அன்புள்ள சாருவுக்கு,நான் சிவசங்கரன். மதுரையில் இருந்து வந்து அண்மையில் உங்களை சென்னையில் சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அன்று, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நீங்கள் ‘கலையும் மீறலும்’ பற்றிப் பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது. நேரம் இன்னும் இருந்திருந்தால் நீங்கள் தொட்ட இடங்களைப் பற்றி இன்னும் நிறைய பேசியிருப்பீர்கள் என்றே தோன்றியது. நான் அவ்வளவு சிறப்பான பேச்சாளன் இல்லை என்று நீங்கள் அவ்வப்போது சொல்வீர்கள். உண்மையில், நீங்கள்தான் மிக … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

அன்புள்ள சாருவுக்கு, அன்பு நாவல் ஒரு அகோர தாண்டவம்..உருத்திர மூர்த்தியாய் அப்படி ஒரு ஆட்டம் நாவல் முழுவதும்… இருப்பினும் நாவலின் மையச்சரடு அன்பின் சீரான கோர்வையைப் பற்றிக் கொண்டே செல்கிறது. நாவல் உணர்த்தும் பொருள் பிரதியில் முழுதாய்ப் பொதிந்துள்ளது.. இதனுள் முத்துக் குளித்தால் தரிசனம் கிடைக்கப் பெறலாம்…கிடைக்கும்… மிலரப்பாவின் கதை மரகத மாணிக்கம்… விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்ல..ஒரு 300பக்க நாவல் இவ்வளவு வேகமாக நான் படித்ததே இல்லை. போனில் படித்தால் கண் எரிகிறது என்று எப்போதும் புத்தகங்களையே … Read more