வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு

ஆம், அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற … Read more

கொல்லிமலைச் சித்தரும் என் புதிய நாவலும்

இந்தத் தலைப்பு சற்று ’லோடட்’ ஆக இருக்கிறது என்று நண்பர் சொன்னார். என் தலைப்புகள் எல்லாமே சட்டென்று மனதில் போய் ஒட்டிக் கொள்பவை. ஸீரோ டிகிரி. காமரூப கதைகள். ராஸ லீலா. இப்படி. ஆனால் மேலே உள்ள தலைப்பை நானே அடிக்கடி மறந்து விடுகிறேன். ஆனால் கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொன்ன கதை என்றும், கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்றும் தலைப்பு வைத்திருக்கிறேனே? மட்டுமல்லாமல் எனக்குப் … Read more