கொக்கரக்கோ எழுத்தாளனான கதை
கொக்கரக்கோவை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். மனிதனாகப் பிறந்த ஜென்மங்கள் எல்லாமே அடுத்த மனிதனை இம்சை செய்வதற்காகவே ஜென்மம் எடுத்திருக்கிறோம் என்பது போல் பழகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கொக்கரக்கோ மட்டும் யார் வம்புக்கும் போகாமல், யாரையும் இம்சை செய்யாமல் வாழ்ந்தான். அதனாலேயே எனக்கு அவனைப் பிடித்து விட்டது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் கொக்கரக்கோவிடம் இருந்த குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் எனக்குப் பிடித்தும் இருந்தது, பிடிக்காமலும் இருந்தது. பிடித்திருந்ததற்குக் காரணம், லௌகீகம். நான் லௌகீகத்தில் … Read more