நேரம்

மேற்கு ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நீண்ட கால நண்பர் இங்கே ஜூன் மாதம் வருகிறார். என்னை ஒரு லஞ்சிலோ டின்னரிலோ சந்திக்க வேண்டும் என்கிறார். ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றால், உடனடியாக ஓடி விடுவேன். அதில் எனக்கு ஒரு நான்கு ஐந்து மணி நேரம் – அதாவது, அரை நாள் – செலவாகி விடும். ஆனால் இப்போதும் நான் அப்படி இருக்க முடியாது. என் வயது 70. என்னுடைய ஒவ்வொரு மணித்துளியையும் மிகக் கச்சிதமாக செலவு … Read more

கொண்டாட்டம்

வாழ்வின் மிகக் கொண்டாட்டமான, குதூகலமான மனநிலையில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பது இப்போதுதான். பெட்டியோ… அப்படியாகச் சென்று கொண்டிருக்கிறது. இன்றும் நயநதினியிடமிருந்து ஒரு நீண்ட மெஸேஜ். ஒரு நாவலின் அத்தியாயம்தான் அது. அதை மொழிபெயர்த்து அப்படியே ப்ளாகில் போட்டு விட மனம் துடிக்கிறது. குறைந்த பட்சம் அதில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மேற்கத்திய இசைக் கோர்வையையாவது போடலாம் என்று ஆர்வமுறுகிறது மனம். ஆனால் நாவலிலிருந்து எதுவுமே வெளியில் வரலாகாது எனபது என்.எஃப்.டி.யின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. வெளியே பிரபலம் … Read more

நயநதினியின் வாட்ஸப் மெஸேஜ்

நண்பர் ரிஷான் ஷெரிஃப் ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: அன்பு Charu Nivedita ’நயந்தினி’ என்றொரு பெயர் சிங்களத்தில் இல்லை. அவரது பெயர் நயனி, நயனா அல்லது நந்தினியாக இருக்கக் கூடும். ஏன் சொல்கிறேன் என்றால் சிங்களவர்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது பிறந்த நேரத்தின் அடிப்படையில் மிகவும் நல்ல அர்த்தத்துடன் கூடிய பெயரையே சூட்டுவார்கள். அவர்களுக்கு தந்தை வழிப் பெயரொன்றும், தாய்வழிப் பெயரொன்றும் குடும்பப் பெயரொன்றும் சேர்ந்து மிக நீண்ட பெயரொன்று வைக்கப்படும். அரசாங்க அடையாள அட்டைகளிலும், பரீட்சைத் … Read more

நயந்தினியின் கதை…

பெட்டியோ… நாவலை இதுவரை மூவர் படித்தோம். இலங்கை நண்பர், நான், சீனி. கடைசி அத்தியாயம் உங்கள் எழுத்தின் உச்சம் என்றார் சீனி. எனக்குமே அப்படித்தான் தோன்றியது. ஆனால் என்.எஃப்.டி.யில் வெளியிடுவதற்கு முன்னால் ஒரு யோசனை என்றார். கடைசி அத்தியாயத்தில் வரும் நயந்தினி என்ற சிங்களப் பெண்ணை நாவல் நெடுகிலுமே நிகழ விட்டால் என்ன? சீனியின் யோசனை. எனக்குமே அந்த எண்ணம் இருந்தது என்றாலும், அதை வேறு ஒரு நாவலாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் சீனி சொன்ன … Read more

மகிழ்ச்சியான தினம்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சியான நாவலை எழுதி முடித்தேன். அதுவும் நான்கே நாட்களில். 125 பக்கம். பேய் வேகத்தில் எழுதினேன். அடை மழை போல் கொட்டின வார்த்தைகள். இருவருக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் ஒரே அமர்வில் படித்து விட்டார்கள். அதுவே பெரிய வெற்றி. நான் நினைத்தது போலவே இறுதி அத்தியாயம் பிரமாதம் என்கிறார்கள். நானும் அப்படி சமீப காலத்தில் எழுதியது இல்லை. நேற்று முடித்து அனுப்பும்போது நள்ளிரவு. இதைக் கொண்டாடுவதற்கே கோவா போகலாம் என்று இருக்கிறது. … Read more