ப்ளாக் ஹ்யூமர் என்றால் என்ன? (கட்டுரைதான், கதையாகவும் படிக்கலாம்!)

பெங்களூர் சென்று வந்தேன்.  திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன்.  பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.  பஸ்ஸில் பயணம் செய்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.  பஸ் பயணமே எனக்கு ஒத்து வருவதில்லை.  இந்தியாவில் பஸ்களில் கழிப்பறை வசதி இல்லாததால் என்னால் பஸ்ஸில் செல்ல முடிவதில்லை.  அந்தப் பிரச்சினை இரவில் மட்டும்தான்.  பகலில் நானும் மற்றவர்கள் மாதிரிதான்.  பகலில் என் சிறுநீரகம் சரியாக வேலை செய்யும்.  ஆனால் ஒரு முழுப் … Read more

ஒரு முக்கியமான புத்தகம்

காலத் தாமஸ் (ரெனே) எழுதிய The Testament of the dead Daughter என்ற நாவல் எனக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் AbeBooks என்ற நிறுவனத்தில் கிடைக்கிறது. அந்த நிறுவனத்தில் இது போன்ற அரிதான புத்தகங்களை முன்பும் வாங்கியிருக்கிறேன். பாரிஸில் உள்ள பொம்ப்பிதூ நூலகத்தில் இந்த நூல் நிச்சயம் இருக்கும். ஸ்கேன் பண்ணிக் கேட்டால் கொடுப்பார்கள். பாரிஸில் யாராவது என் மீது பிரியம் கொண்ட ஆத்மா இருந்தால் முயற்சித்துப் பார்க்கலாம். பதினைந்து நாளாகத் … Read more

notes on making of a novel (1)

பெட்டியோ நாவலை எப்படியெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது பற்றிய குறிப்புகளை இங்கே தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன். எனவே அந்த நாவலை வாசிக்க விருப்பப்படும் நண்பர்கள் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து வந்தால் நாவல் அனுபவம் இன்னும் கூடுதலாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். இப்போது முதல் குறிப்பு: My Life and Times with Antonin Artaud என்ற நாவலை ஆர்த்தோவின் மிக நெருக்கமான நண்பரான Jacques Prevel எழுதியிருக்கிறார். என்ன முயன்றும் அந்த நாவல் எனக்குப் … Read more

the making of a novel…

பேயைப் போல் படித்துக் கொண்டிருக்கிறேன். ராஸ லீலாவைப் போல் இன்னொரு நாவல் எழுத முடியாது என்றே என் நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் பெட்டியோ ராஸ லீலாவைப் போல் இருக்கும் என்று தோன்றுகிறது. ராஸ லீலாவைத் தாண்டி விட்டதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ராஸ லீலா எதார்த்த சொல்லாடலால் ஆனது. ஆனால் பெட்டியோ metaphysical narrative மூலம் உருவாகிறது. வெறும் மெட்டாஃபிஸிக்ஸாக இல்லாமல் மெட்டாஃபிஸிக்ஸையே பருண்மையாக ஆக்கும் முயற்சியாக இருக்கும். அந்த உலகத்தில் வாழ்வதற்காக இப்போது … Read more

விதியை வென்றவர்கள்…

முப்பத்தாறாவது வயதில் அந்தக் கவிஞனிடம் மருத்துவர்கள் சொன்னார்கள், உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது, அதுவும் குணப்படுத்தவே முடியாத நிலையில் இருக்கிறீர்கள். சொஸ்தப்படுத்தவே முடியாத பைத்தியம் என்பதால் உலகம் அவரைக் கை விட்டது. சமூகம் கை விட்டது. அம்மாவும் கைவிட்டு விட்டாள். சகோதரியும் கை விட்டாள். ஆனால் ஒரே ஒரு தச்சர் குடும்பம் அவரைப் பராமரித்தது. அவர் மற்றுமொரு முப்பத்தாறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய வாழ்வை இரண்டு முப்பத்தாறுகளாகப் பிரிப்பார்கள். இரண்டாவது முப்பத்தாறிலும் அவர் சும்மா இருக்கவில்லை. … Read more

புலம் பெயர்ந்து வாழும் சிலரின் தடித்தனம்

நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் நாய்களையும் அவைகளின் உயிருக்கு வாகனங்களால் ஏற்படக் கூடும் உயிராபத்தையும், அப்படி ரோட்டின் குறுக்கே பாயும் நாய்களால் மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் பற்றி எழுதிய போது, இலங்கை மக்களை ஒரு இந்திய எழுத்தாளர் நாய்கள் என்று திட்டி விட்டார் என்று காவல்துறையில் புகார் செய்து, பொதுமக்களையும் உசுப்பி விட்டு எனக்கு உயிராபத்து ஏற்படுத்திய சில தமிழர்களைப் போல ஃப்ரான்ஸிலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஃப்ரான்ஸில் சமீபத்தில் … Read more