ப்ளாக் ஹ்யூமர் என்றால் என்ன? (கட்டுரைதான், கதையாகவும் படிக்கலாம்!)
பெங்களூர் சென்று வந்தேன். திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன். பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பஸ்ஸில் பயணம் செய்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பஸ் பயணமே எனக்கு ஒத்து வருவதில்லை. இந்தியாவில் பஸ்களில் கழிப்பறை வசதி இல்லாததால் என்னால் பஸ்ஸில் செல்ல முடிவதில்லை. அந்தப் பிரச்சினை இரவில் மட்டும்தான். பகலில் நானும் மற்றவர்கள் மாதிரிதான். பகலில் என் சிறுநீரகம் சரியாக வேலை செய்யும். ஆனால் ஒரு முழுப் … Read more