அல் பச்சீனோ

நயநதினி திடீரென்று “உன்னுடைய மார்ஜினல் மேன் நாவலைப் படித்திருக்கிறேன்” என்றாள். இலங்கையில் என் ஆங்கில நூல்கள் கிடைக்க வாய்ப்பு இல்லையே எனக் குழம்பினேன். அடிப் பாவி, ஏன் இதை நீ முன்பே சொல்லவில்லை? இப்போதுதானே படித்தேன்? ஆமாம், உனக்குப் புத்தகம் எங்கிருந்து கிடைத்தது?  இப்போதுதானே நானே என் பதிப்பாளர் நண்பரிடமிருந்து உனக்கான ஒரு பிரதியை வாங்கி வைத்திருக்கிறேன். இதற்குப் பதில் இல்லை.  நானும் எதையும் ஒரு தடவைக்கு மேல் கேட்பதில்லை.  ஆனால் நாவலுக்கு உள்ளேயிருந்து பல விஷயங்களைப் பேசினாள்.  … Read more

நண்பர்களின் கவனத்துக்கு…

இப்போது நான் எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி இன்னும் சில நாட்களில் விரிவாகவே எழுத இருக்கிறேன். நான் கடந்த மூன்று மாதங்களாக மிகக் கடுமையான மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். மலச்சிக்கல் என்றால் நான்கு தினங்கள் கூட மலம் வெளியேறாமல், சாப்பிட முடியாமல் பெரும் அவதி. அதோடேயேதான் ஸ்ரீலங்காவும் சென்று வந்தேன். ஆச்சரியத்துக்குரிய வகையில் ஆயுர்வேத மருந்தும் காப்பாற்றவில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருநாள் ஃபேஸ்புக்கில் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றித் தற்செயலாக அறிந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. பாஸ்கரன் … Read more