ஒரு முக்கியமான புத்தகம்

காலத் தாமஸ் (ரெனே) எழுதிய The Testament of the dead Daughter என்ற நாவல் எனக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் AbeBooks என்ற நிறுவனத்தில் கிடைக்கிறது. அந்த நிறுவனத்தில் இது போன்ற அரிதான புத்தகங்களை முன்பும் வாங்கியிருக்கிறேன். பாரிஸில் உள்ள பொம்ப்பிதூ நூலகத்தில் இந்த நூல் நிச்சயம் இருக்கும். ஸ்கேன் பண்ணிக் கேட்டால் கொடுப்பார்கள். பாரிஸில் யாராவது என் மீது பிரியம் கொண்ட ஆத்மா இருந்தால் முயற்சித்துப் பார்க்கலாம். பதினைந்து நாளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் இரண்டு பேரிடம் சொன்னேன். அவர்களுக்கும் கிடைக்கவில்லை. காலத் எழுதிய ஒரே புத்தகம் இது. ஃப்ரெஞ்ச்சில் வேறொரு காலத் இருந்தார். பெரிதும் கொண்டாடப்பட்ட எழுத்தாளர். அவர் வேறு. இந்த காலத் தாமஸ் வேறு. கீழே உள்ள ஓவியம் காலத்தை ஆர்த்தோ வரைந்தது.

இந்த இணைப்பில் இன்னும் சரியாகப் பார்க்கலாம்.

Portrait de Colette Thomas – Centre Pompidou

Colette Thomas

René (Colette Thomas) – The Testament of the dead Daughter – CABINET Gallery: 132 Tyers Street, Vauxhall Pleasure Gardens, London SE11 5HS

புத்தகத்தின் விலை, தபாலில் அனுப்பும் செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். கிடைக்கிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.