சாருவின் முன்ணுணர்வு: அ. ராமசாமி

சாரு நிவேதாவின் முன்னுணர்வு ஆச்சரியம் ஊட்டக்கூடியதாக இருக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி கனடாவிலிருந்து எழுதும் தமிழ் எழுத்தாளரான அ.முத்துலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து செயல்படும் அர்மோரி ஸ்கொயர் விருதுக்குழுவின் அறிவிப்பொன்றின் இணைப்பைத் தந்திருந்தார்.  அதில் தென்னாசிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களுக்கான விருது அறிவிப்பின் குறும்பட்டியல் இருந்தது. அப்பட்டியல் இடம்பெற்றுள்ள 7 நூல்களில் அவரது நூலோடு சாருவின் நூலும் இடம் பெற்றிருந்தது.  அப்பதிவை வாசித்தவுடன் சாருவின் வலைப்பக்கம் சென்று பார்த்தேன். அப்படியொன்றைப் … Read more

தீண்டாமை

தீண்டாமை பற்றி யாரும் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதும் கூட தலித் மக்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கரைத்து விட்ட கொடுஞ்செய்தியையும் அறிந்தோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு கொடுமை தீண்டாமை. அந்தக் கொடுமையிலிருந்து மீண்டு வருவதற்கு சமூகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தீண்டாமை என்பது ஹிந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. உலகின் பல்வேறு சமூகங்களில் தீண்டாமை இருந்திருக்கிறது. முக்கியமாக, ஆஃப்ரிக்காவிலும் … Read more

றியாஸ் குரானா: இலங்கையிலிருந்து ஒரு மாற்றுக் குரல்

நான் எந்த ஒரு எழுத்தாளரையும் சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவர் எழுதிய பெரும்பாலானவற்றைப் படித்து விட்டுச் செல்வதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இப்போது இலங்கையில் வசிக்கும் நண்பர் றியாஸ் குரானாவை சந்திக்கப் போகிறேன். அதனால் அவர் எழுதிய அனைத்தையும் படிக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவருடைய ஒரு நேர்காணல் இது: ”தமிழ் இலக்கியத்தை மிக அதிகம் பாதித்தது ரஸ்ய இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், அதுதான். இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பலமொழிகளில் ரஸ்ய இலக்கியத்திற்கு பெரும் … Read more