கோயம்பத்தூர் புத்தக விழா
கோயம்பத்தூரில் நடந்து கொண்டிருக்கும் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அரங்கம் எண்: 239, 240, 265, 266. ஜூலை 21 முதல் ஜூலை 30 வரை. கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை.
கோயம்பத்தூரில் நடந்து கொண்டிருக்கும் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அரங்கம் எண்: 239, 240, 265, 266. ஜூலை 21 முதல் ஜூலை 30 வரை. கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை.
ஆர்த்தோ பற்றிய நாடகத்திற்கு ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்றும் தமிழில் மேலே குறிப்பிட்டவாறும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நண்பர் அ. ராமசாமி நாடகத்தில் சில திருத்தங்களைக் குறிப்பிட்டார். அந்தத் திருத்தங்களையும் செய்து விட்டேன். நாடகத்துக்கான தமிழ்த் தலைப்பும் அ. ராமசாமி வைத்ததுதான். இப்போது அந்த நாடகத்தின் பிடிஎஃப் வடிவத்தை அதை வாசிக்க விரும்புபவர்களுக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அதற்கான விலை அல்லது நன்கொடையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். நாடகத்தை தமிழில் அரங்கேற்றம் செய்ய முடியும் என்றே … Read more
Antonin Artaud: The Insurgent ஆர்த்தோ பற்றிய நாடகத்தை சில நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் அனைவருக்குமே நாடகத்தைப் படித்ததும் ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ ஏற்பட்டது என்றே அவர்களின் எதிர்வினையிலிருந்து தெரிந்து கொண்டேன். வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு ஆச்சரிய உணர்வு அவர்கள் பேசும் போது எனக்குத் தெரிந்தது. சீனியிடம் இதை என்.எஃப்.டி.யில் விடலாமா என்று கேட்டேன். வேண்டாம், நாடகங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று சொல்லி விட்டார். இம்மாதிரி விஷயங்களில் சீனி பேச்சுக்கு மறு பேச்சு … Read more
ஆர்த்தோவின் வாழ்வில் ஒரு வரலாற்று அபத்தம் நிகழ்ந்தது. பின்நவீனத்துவ ஃப்ராய்டியர் லக்கான் ஆர்த்தோவை மனநோயாளி என்றும், பொருளற்றவற்றை எழுதுபவர் என்றும் சொன்னார். இன்று ஆர்த்தோ மானுடத்தின் ஒரு குரல். இன்று கல்வித்துறையின் சில பழைய ஆசாமிகளுக்கு மட்டுமே லக்கான் முக்கியமானவர். நவீன நரம்பியலின் வருகைக்குப் பின் முற்றிலும் அர்த்தமற்ற சொற்றொடர்களின் குவியலாகவே லக்கான் பார்க்கப்படுகிறார். அறிவு காலாவதியாகும்போது சாஸ்வதமாக நின்றிருக்கும் இன்னொன்று உள்ளது. பித்தின் வழியாக மட்டுமே சென்றடையத்தக்க ஓர் இடம். அதைச் சொல்ல உங்கள் நாடகத்தால் … Read more
சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இரவில் நான் Cradle of Filth என்ற பாப் குழுவின் Nymphetamine என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். க்ரேடில் ஆஃப் ஃபில்த் எனக்கு மிகவும் பிடித்த குழு. அடித் தொண்டையிலிருந்து அலறுவார் பாடகர். சாஸ்த்ரீய இந்திய இசை கேட்ட செவிகள் பிய்ந்து விடும். செவிகளிலிருந்து ரத்தம் வருவது போல் இருக்கும். அதுதான் இசை என்கிறார் ஆர்த்தோ. ஆர்த்தோவின் கோட்பாடுகள்தான் இம்மாதிரி இசைக்கான உந்துதல் என்பதை இன்று இசை வல்லுனர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆர்த்தோ … Read more
இதெல்லாம் அபாண்டம் சாரு. நானா பலமுறை செய்தேன். ஒரே முறை சந்தித்தேன். அவ்வளவு தான். ஒரு அரங்கேற்றத்துக்கு நீங்கள் தலைமை தாங்குகிறீர்கள். சரி தலைவர் வருவாரேன்னு வந்தா நீங்கள் எப்போதும் போல முதல் வரிசையில் என்னுடனேயே உட்காருங்கள் என்றீர்கள். உலகளந்தானும் நானும் எவ்வளவோ மன்றாடினோம் நீங்கள் விடவில்லை. அது தான் உங்கள் பண்பு. நாங்க தான் வேண்டாம் வேண்டாம் என்கிறோமே கேட்டீர்களா(ஜெயலலிதா குரல்). அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது. அவங்க ஒரு நான்கு பேரை கூப்பிட்டார்கள். அதோடு … Read more