பெட்டியோ இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்கு விற்பனை!

தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு சாதனைதான். பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. வாங்கியவர் பெயர் தரவில்லை. நியாயம்தான். குடும்பத்தில் குழப்பம் ஆகி விடக் கூடாது. மிக நிச்சயமாக அவர் வாங்கிய இந்தப் பிரதி இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். பத்தாயிரத்துக்கு வாங்கப்படும் பிரதிகள் இன்னும் ஒரு வருடத்திலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டும். எனவே இப்போது நீங்கள் பெட்டியோவை வாங்குவதற்காக செலவிடும் … Read more

இலங்கைப் பயணம் – 3

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஊர் ஊராக சிறு பத்திரிகை நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கி, அங்கிருந்து காசு வாங்கிக் கொண்டு இன்னொரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன்.  தனியாகப் போவதில்லை.  கூடவே ஓரிரு சிறுபத்திரிகை நண்பர்களும் இருப்பார்கள்.  அதிகம் காசு கிடைத்தால் குடிப்போம்.  அப்படி ஒருமுறை தர்மபுரியில் ஜெயமோகன் வீட்டுக்குக் கூட விக்ரமாதித்யனுடன் சென்றிருக்கிறேன்.  அப்போது அஜிதன் நாலு வயதுப் பையன்.  ஜெயமோகன் வீட்டுக்கு எதிர் வீடு பிரம்மராஜன் வீடு.  பிரம்மராஜனும் ஜெயமோகனும் பேசிக் கொள்வதில்லை.  நாங்களும் … Read more