பெட்டியோ இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்கு விற்பனை!

தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு சாதனைதான். பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. வாங்கியவர் பெயர் தரவில்லை. நியாயம்தான். குடும்பத்தில் குழப்பம் ஆகி விடக் கூடாது. மிக நிச்சயமாக அவர் வாங்கிய இந்தப் பிரதி இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். பத்தாயிரத்துக்கு வாங்கப்படும் பிரதிகள் இன்னும் ஒரு வருடத்திலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டும். எனவே இப்போது நீங்கள் பெட்டியோவை வாங்குவதற்காக செலவிடும் தொகை செலவு அல்ல. மூலதனம். எக்காரணத்தைக் கொண்டும் நூறு பிரதிகளுக்கு மேல் இது விஸ்தரிக்கப்படாது. அது என்.எஃப்.டி.யின் அடிப்படைத் தன்மைக்கே முரணானது. பின்வரும் புகைப்படங்களைக் காணுங்கள். Owned by, sold என்ற வார்த்தைகள் முக்கியம். .7 ETH என்பது இந்திய ரூபாய்க்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் வரும்.

வாங்க விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதலாம். அல்லது, வினித்தைத் தொடர்பு கொள்ளலாம். வினித் எண்: 84384 81241

எனக்கு எழுத: charu.nivedita.india@gmail.com