பெட்டியோ நாவலை என்.எஃப்.டி.யில் எளிதாக வாங்குவது எப்படி? வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவது எப்படி?

பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதியை வாங்கிய அன்பர் தன் பெயரைக் குறிப்பிடாமல் ஏதோ எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு முந்நூறு பக்க நூலை வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவதற்கு இதை விட எளிதான வழி உண்டா என்ன? நீங்களும் இந்த வழிமுறையையே பின்பற்றலாம். பல வீடுகளில் ஐநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே டிவோர்ஸ் வரை போகிறது என்று ஆண்களும் பெண்களும் புகார் சொல்கிறார்கள். குடிப்பதைக் கூட அனுமதிக்கிறாள், புத்தகம் வாங்கினால் பெரிய அடிதடி ஆகிவிடுகிறது என்கிறார்கள் ஆண்கள். லட்சம் ரூபாய்க்கு வைரத்தோடு வாங்கித் தருகிறார். நான் என்னுடைய சம்பளப் பணத்தில் முந்நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் ஏதோ தகாத செயலில் ஈடுபட்டு விட்டதைப் போல் ரகளை பண்ணுகிறார் என்கிறார்கள் பெண்கள். இந்தப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு நீங்களும் இப்படி ஏதாவது எண்களைப் போட்டு வாங்கலாம்.

என்.எஃப்.டி. என்ற இதுவரை நமக்குப் பழக்கம் இல்லாத ஒரு இடத்திலிருந்து எப்படி வாங்குவது என்பதும் சுலபம்தான். பத்தே நிமிடங்களில் முடிந்து விடும் வேலை. கீழே நான் கொடுத்திருக்கும் காணொலிகளைப் பின்பற்றி வாங்குங்கள். அதிலும் சிரமம் ஏற்பட்டால் எனக்கு எழுதுங்கள். இதுவரை இரண்டாம் எண்ணுள்ள பிரதி, இருபத்தைந்தாம் எண்ணுள்ள பிரதி (ஒவ்வொன்றும் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் விலை), மற்றும் 18, 22, 70, 29, 53 இலக்கமுள்ள பிரதிகள் (ஒவ்வொன்றும் உத்தேசமாக பதினோராயிரம் ரூபாய்) விற்பனை ஆகியிருக்கின்றன. சிலர் முன்பதிவு செய்து விட்டுக் காத்திருக்கிறார்கள். ஆக, விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களிலேயே மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டது பெட்டியோ.

மொத்தமே நூறு பிரதிகள்தான். அதற்கு மேல் இல்லை. இன்னும் ஆறு மாதத்தில் 99 பிரதிகளும் விற்று விடும் என்று நம்புகிறேன். ஐந்து லட்சம் ரூபாய் விலையுள்ள நூறாவது பிரதி விற்குமா என்று என்னால் சொல்ல முடியவில்லை.

இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். என்னுடைய ஜப்பான் பயணம் ரொப்பங்கி இரவுகள் நாவலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தைய மூன்று வார இலங்கைப் பயணத்தின் விளைவு பெட்டியோ. இந்த நாவலின் என்.எஃப்.டி. விற்பனையில் வரும் பணம் அவ்வளவும் என் தென்னமெரிக்கப் பயணத்துக்கு ஆகும்.

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்குவதற்கான வழிமுறை:

https://mail.google.com/mail/u/0?ui=2&ik=525ba66860&attid=0.1&permmsgid=msg-a:r5496500691670733248&th=18ba827dc73cb459&view=att&disp=safe&realattid=18ba827a6cefe477a61

இந்தக் காணொலியின் மூலம் வாலட்டை உருவாக்கி உங்களுடைய வங்கி அட்டையின் மூலம் நாவலை வாங்கலாம். யு.பி.ஐ. மற்றும் ஜீபே மூலம் வாங்கினால் அதற்கு நிறைய நேரம் செலவாகும். அது சுற்றுவழி.

Video on how to buy the novel after creating the wallet using debit/credit card. Please don’t use UPI or Gpay as they will take you to KYC process and so on and it’s a time-consuming process.