ஒரு படப்பிடிப்பின்போது…
மெரினா கடல்கரையில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது எடுத்த படம்
மெரினா கடல்கரையில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது எடுத்த படம்
சென்ற ஆண்டு புத்தக விழாவில் வெளியானது என்னுடைய நாவல் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு. அந்த நாவல் பற்றி பல பெண்கள் எனக்கு தம் வாழ்வையே மாற்றி அமைத்த நூல் என்று சொன்னார்கள். உண்மைதான். ஆண்களின் வாழ்வையும் மாற்றக் கூடிய நாவல்தான். ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும். ஆயிரம் பிரதி கூட விற்றிருக்காது என்று யூகிக்கிறேன். எத்தனை பிரதிகள் விற்றன என்று ஒருபோதும் என் பதிப்பாளர்களிடம் நான் கேட்டதில்லை. முந்நூறு நானூறு என்றே … Read more
நான் வருகின்ற 26ஆம் தேதி பெங்களூர் செல்ல இருக்கிறேன். 29 தேதி வரை பெங்களூரில் இருப்பேன். தங்குமிடம் கோரமங்களா. பெங்களூர் பயணத்தின் காரணங்கள் பல. அதில் ஒன்று இரண்டை வெளியே சொல்லலாம். ஒன்று, டிசம்பர் பதினெட்டு என் பிறந்த நாள். அதை பெங்களூரில் சற்று தாமதமாகக் கொண்டாடுவது. பதினெட்டாம் தேதி அன்று வெளியே செல்ல அனுமதி கிடைக்காது. அதனால்தான் இருபத்தாறுக்குத் தள்ளிப் போனது. அதோடு என் தோழரின் பிறந்த நாளும் இருபத்தைந்தாம் தேதி வருகிறது. இரண்டையும் சேர்ந்து … Read more
Biblio என்ற பத்திரிகையில் Conversations with Aurangzeb நாவல் பற்றிய விரிவான ஒரு மதிப்புரை வந்துள்ளது. அக்டோபர் – டிஸம்பர் இதழ். https://biblio-india.org/showart.asp?inv=18&mp=OD23 Download என்னும் சுட்டியை அழுத்தவும்.
இனோகா வசிக்கும் ஊருக்கு என்னால் செல்ல முடியவில்லை. ஆனாலும் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இனோகாவே நீண்ட தூரம் பயணம் செய்து கொழும்பு வந்து என்னைச் சந்தித்தார். கேகே சமன் குமர எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார். அப்படிப்பட்டவர் இனோகாவின் மொழிபெயர்ப்பு போல இன்று சிங்களத்தில் செய்வதற்கு யாருமே இல்லை; இனோகா உங்களுக்குக் கடவுளின் பரிசு என்றார். இனோகாவும் கேகேயின் என்னைப் பற்றிய ஆவணப்படத்தில் என்னை நேர்காணல் செய்கிறார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. சிங்களத்தில் இனோகா … Read more
மிக மும்முரமாக உல்லாசம், உல்லாசம் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நாவல் ரொப்பங்கி இரவுகள் நாவலைப் போல் அதிக ஆய்வுகளைக் கோரவில்லை. ரொப்பங்கி இரவுகளுக்காக நான் மிகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. படிக்க வேண்டிய நாவல்கள் மலை போல் குவிந்துள்ளன. இத்தனைக்கும் ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் ஒவ்வொரு நாவலைத்தான் படிக்கிறேன். எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமானால் ஆயுள் போதாது. ரியூ முராகாமியை மட்டும் முழுமையாகப் படித்து விட்டேன். அவருடைய படங்கள் இன்னும் ஒன்றிரண்டு பாக்கி இருக்கின்றன. ஆனால் உல்லாசம் … Read more