Coversations with Aurangzeb: A review
Biblio என்ற பத்திரிகையில் Conversations with Aurangzeb நாவல் பற்றிய விரிவான ஒரு மதிப்புரை வந்துள்ளது. அக்டோபர் – டிஸம்பர் இதழ்.
Biblio என்ற பத்திரிகையில் Conversations with Aurangzeb நாவல் பற்றிய விரிவான ஒரு மதிப்புரை வந்துள்ளது. அக்டோபர் – டிஸம்பர் இதழ்.
Vagina Monologues என்ற நாடகத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். அது ஒரு மட்டமான நாடகம். நாடகமே இல்லை. ஆனால் அதன் பேசுபொருளாலும் தலைப்பாலும் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. நம் பெருமாள் முருகன் மாதிரி. ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெர்மன் க்ரேர் (Germaine Greer) அப்படிப்பட்டவர் அல்ல. உண்மையான பெண்ணியவாதி. Cunt என்ற பெயரிலும், Suck என்ற பெயரிலும் பத்திரிகைகள் நட்த்தியவர். அப்பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் The Madwoman’s Underclothes என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. கேத்தி … Read more
உல்லாசம் உல்லாசம் நாவல் இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அநேகமாக அதில் உள்ள சம்பவங்களை யாராலும் நம்ப இயலாது. Anarchism & eroticism இரண்டும் கலந்த நாவல். இந்த இரண்டுமே நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் எல்லாமே நாம் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களிடம் கண்டதுதான். வான்கோ ஒரு பெண்ணிடம் காதை அறுத்துக் கொடுத்ததைப் படித்திருக்கிறோம். ஆனால் அதை இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செய்தான் என்றால் நம்ப மாட்டோம் இல்லையா? யேசுவின் கதை நமக்குத் … Read more
பெட்டியோ நாவலின் விற்பனை தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் நான் என்ன சாதனை செய்தாலும் அது இங்கே செய்தி இல்லை என்பதால் நானேதான் வழக்கம்போல் என் தளத்தில் அந்தச் செய்தியை வெளியிட வேண்டியிருக்கிறது. முதலில் கீழே உள்ள விவரங்களைப் பாருங்கள். இதுவரை பெட்டியோ நாவல் பதினோரு பிரதிகள் என்.எஃப்.டி.யில் விற்பனை ஆகியிருக்கின்றன. முதல் பிரதியாக இரண்டாம் எண்ணைக் கொண்ட பிரதி 1260 டாலர், அதாவது, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது. வாங்கியவர் … Read more
நான்கு நாட்களுக்கு முன் அராத்து ஃபேஸ்புக் மூலமாக என்னிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். நான் அப்போது பாதுக்கவிலும் பிறகு கொழும்பிலும் மிக முக்கியமான நேர்காணல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். என்னைப் பற்றி கே.கே. சமன் குமர எடுத்த ஆவணப்படமும் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது. காலையில் பத்துக்கு ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்குத்தான் படப்பிடிப்பு முடியும். அதற்கு மேல் நள்ளிரவு இரண்டு மணி வரை வைன். கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு எபிசோடுகளை எடுத்திருக்கிறார் சமன் குமர. இப்போது அராத்துவின் பதிவும் … Read more
நான்தான் ஔரங்ஸேப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர் இந்தத் தலைப்பு ஒரு முரண். காவிய மரபும் பின் நவீனத்துவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காவியங்கள் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை ஒற்றையாய்த் தொகுத்து சாராம்சமாய் உரத்து ஒலிக்கும் ஒற்றை தரிசனத்தோடு வருகிறவை. பின் நவீனத்துவம் அறிவியல், பண்பாடு, கலை, பொருளாதாரம், மானிடவியல், தத்துவம் என்று எல்லாவற்றிலும் ஒற்றையாய் வைக்கப்படும் எல்லா தரிசனங்களையும் மறுப்பது. மார்க்சியத்தையும், நவீன உளவியலையும், நவீன மருத்துவத்தை நம் உடல் மீதான அறிவின் … Read more