குருவும் சிஷ்யர்களும்

எனக்கு பல நண்பர்கள் பொங்கல் வாழ்த்து அனுப்பினார்கள். பதில் அனுப்ப நேரம் இல்லை. உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனக்கு வரும் பொங்கல் வாழ்த்தை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. ஏனென்றால், நான் பல காலமாகவே ஒரு ஞானியின் மனநிலையில் வாழ்ந்து வருவதாக நினைக்கிறேன். குகையில் தவம் செய்யும் ரிஷி என்று வைத்துக் கொள்ளுங்கள். என் அறைதான் என் குகை. என் அறை ஒரு பங்க்கர். லௌகீக வாழ்வின் எந்த ஒரு கொண்டாட்டமும் விழாவும் அல்லது … Read more

நிரூபணம்

என் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்களுக்குத் தெரியும், நான் எழுத ஆரம்பித்த இருபத்தைந்தாம் வயதிலிருந்து ஐம்பதாவது வயது வரை என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பதிப்பகமும் என் நூல்களை வெளியிடத் தயாராக இல்லை. மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட கொள்கை அடிப்படையில் வெளியிட மறுத்து விட்டார்கள். என்ன கொள்கை? அவர்களைப் பொருத்தவரை நான் எழுதுவது குப்பை. ஆனால் அப்படி மறுக்கும் அவர்களே நட்பு கருதி அதை அச்சடித்துக் கொடுத்து உதவினார்கள். … Read more

இன்றைய புத்தக விழா

இன்று மாலை ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு வருவேன். ஸீரோ டிகிரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள எலிப்பொந்தில் நாலரையிலிருந்து ஒன்பது மணி வரை இருப்பேன். இதற்குப் பிறகு நான் பதினைந்தாம் தேதியிலிருந்துதான் வருவேன். நாளை கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். எஸ்கிலோ பதிப்பக அரங்கில் என் தங்கை மகள் நிவேதிதாவின் இரண்டு ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டுமே எஸ்கிலோ பதிப்பக வெளியீடுகள். நான் இன்னும் படிக்கவில்லை. எஸ்கிலோ அரங்கு எண் 492. அவளும் இப்படி எழுத்தாளராக ஆவாள் என்று தெரிந்திருந்தால் … Read more

SHAME!

பபாஸி பற்றி நான் தமிழக முதல்வருக்கு எழுதிய இரண்டு கடிதங்களையும் வாசகர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது மழை. ஸீரோ டிகிரி அரங்கிலும் யாவரும் அரங்கிலும் மற்றும் பல அரங்குகளிலும் மழையால் புத்தகங்கள் நனைந்து பல லட்சம் நஷ்டம். இத்தனைக்கும் பெரிய மழையெல்லாம் இல்லை. பபாஸியின் அஜாக்கிரதை மட்டுமே காரணம். இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக நான் இந்த ஆண்டு எனக்கு வரக் கூடிய ராயல்டி பணத்தை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பின்வரும் பதிவு … Read more

சங்கமும் கவிதையின் உன்மத்தமும்

மேற்கண்ட தலைப்பில் பேசியதை கொஞ்ச நாளில் விரிவாக ஒரு கட்டுரையாக எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் கட்டுரையாக எழுதினால் எந்த விவாதமும் வராது. பேசினால் வரும். சமீபத்தில் நான் பேசிய இரண்டு உரைகள் பற்றி ஒரு கடிதம்: வணக்கம் சாருபுத்தகத் திருவிழாவில் நீங்கள் இன்று பேசிய உரையைக் கேட்டேன். இனிமேல், “எனக்கு மேடையில் பேச வராது” என்று எங்கும் கூறாதீர்கள். உங்களின் வேறு சில உரைகளையும் கேட்டுள்ளேன். அவற்றுள் இன்றைய பேச்சு ஆகச்சிறந்ததாக இருந்தது. இன்றைய பேச்சில் … Read more