கேரள இலக்கிய விழா – 1

நண்பர்கள் பலரும் கோழிக்கோடு வருவதற்கு டிக்கட் போட்டு விட்டார்கள்.  என் அமர்வு 13ஆம் தேதி காலை பத்து மணிக்கும் அதே நாள் மதியம் இரண்டு மணிக்கும் உள்ளது.  காலை அமர்வு ஔரங்ஸேப் பற்றி.  மதிய அமர்வு மொழிபெயர்ப்பு பற்றியது.  நான் கோழிக்கோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி இரவு எட்டு மணி அளவில் வந்து சேருவேன்.  பதினோராம் தேதியே சென்றிருக்க வேண்டும்.  தேதியில் கொஞ்சம் குழப்பி விட்டேன்.  எனவே இரண்டு இரவுகள்தான் அங்கே தங்குவேன்.  பன்னிரண்டு, பதின்மூன்று.  பன்னிரண்டாம் தேதி … Read more

புத்தக விழா குறிப்புகள் – 1

நாளை (3.1.2024) புத்தக விழா தொடங்குகிறது.  நான் நான்காம் தேதியிலிருந்து பதினோராம் தேதி வரை தினமும் மாலை ஐந்து மணிக்கு வந்து விடுவேன்.  அரங்கு மூடும் வரை இருப்பேன்.  ஆகவே, நான்காம் தேதி மாலை ஸீரோ டிகிரி அரங்கில் சந்திப்போம்.  பெட்டியோ நாவலும், அந்நியனுடன் ஓர் உரையாடல் நேர்காணலும் வெளிவருகிறது.  இரண்டுமே முக்கியமான நூல்கள்.  வாருங்கள். ஸீரோ டிகிரி அரங்கு எண்: 598 C

தேவதேவன் விழா

பெங்களூரில் ஐந்து தினங்கள் இருந்தேன்.  வழக்கத்தை விட அதிக கொண்டாட்டம்.  ஆனால் புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி படு தோல்வி.  ஒருவர்கூட கையெழுத்து வாங்கவில்லை.  ப்ளாஸம்ஸ், ஆட்டா கலாட்டா, புக்வாம் ஆகிய மூன்று கடைகளில் தலா அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன்.  என்னை சந்திக்க கரூரிலிருந்தும் ஹொசூரிலிருந்தும் கோவையிலிருந்தும் நண்பர்களும் வாசகர்களும் வந்திருந்தார்களே ஒழிய மேற்படி புத்தகக்கடைகளில் யாருமே கையெழுத்து வாங்கவில்லை.  அதில் ஆச்சரியமும் இல்லை.  காரணம், நான் என்ன பெருமாள் முருகனா?  சல்மான் ருஷ்டியா?  அல்லது, லோக்கல் … Read more

உல்லாசம், உல்லாசம்… முன்பதிவுத் திட்டம்

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  2022 இறுதியில் ”அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” என்ற நாவலை அளித்தேன்.  2023இல் பெட்டியோ.  இந்த 2024இல் உல்லாசம், உல்லாசம்… வரும்.  அதற்கு இன்னும் நாலைந்து மாதங்கள் ஆகலாம்.  காரணம்: அதைப் படித்த வாசகர் வட்டத்தின் சில முக்கியமான நண்பர்கள் அந்த நாவலை இன்னும் செழுமைப்படுத்துவதற்கான கதைக்கரு அதில் இருக்கிறது என்றார்கள்.  கூடவே, சீனி இன்னொரு ஆலோசனையும் வழங்கினார்.  உல்லாசம் நாவலிலேயே ஜப்பான் கதைகளும் வருகின்றன,  அதனால் ரொப்பங்கி இரவுகளையும் … Read more