லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்…

My Life, My Text என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் Asian Review இணைய இதழில் என் சுயசரிதத்தை எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது அதன் ஆறாவது அத்தியாயம் வெளிவந்திருக்கிறது. இந்தத் தொடருக்காக இதுவரை உலக மொழிகளில் எழுதப்பட்டுள்ள முக்கியமான சுயசரிதங்களைப் படித்து விட்டேன். ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. ஆலன் ராப்-க்ரியே எழுதிய Ghosts in the Mirror. இன்னும் சில தினங்களில் கிடைத்து விடும். காத்திருக்கிறேன். அதற்கிடையில் கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய கலந்துரையாடலுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். … Read more

வாசிப்பு

வாசகர் வட்டத்தில் ராஜா என்று ஒரு நண்பர். என்னுடைய புத்தகங்களில் சித்தரிக்கப்படும் இடங்கள் ஒன்று விடாமல் நேரில் சென்று பார்த்து விடும் பழக்கம் உள்ளவர். ஔரங்ஸேப் நாவலில் நான் அப்படி பல ஊர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். எல்லாம் சூஃபி ஞானிகள் வாழ்ந்து அடங்கிய ஊர்கள். அந்த ஊர்களுக்கெல்லாம் போய் வந்திருக்கிறார் ராஜா. கூட வருவதற்கு நண்பர்கள் இல்லாமலேயே போய் வந்து விடுவார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நாகூர் கொசத்தெருவில் நான் வாழ்ந்த வீட்டுக்குப் போய் வருவார். … Read more

க.நா.சு.வின் பொக்கிஷங்கள்

மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம். ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ முதல் தொகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அந்நூலின் கடைசியில் உள்ள க.நா.சு. பற்றிய கட்டுரை இப்படி முடிகிறது:க.நா.சு.விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்துவிடுவோம்.(பழுப்பு நிறப் பக்கங்கள் – முதல் தொகுதி)சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் எதிர்பார்ப்பு … Read more