என்ன உதவி வேண்டும்?

ஆக்ஸிஸ் வங்கிப் பிரச்சினைக்கு ஒரு நண்பர் ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். ஆக்ஸிஸில் இருப்பதை ஜிபே மூலம் ஐசிஐசிஐக்கு மாற்றிக் கொள்ளலாம். நல்ல யோசனை. ஆனால் நான் கேட்டது, ஆக்ஸிஸிலிருந்து டெபிட் கார்ட் வரவழைப்பதற்கு என்ன பண்ணலாம்? ஏனென்றால், இன்னும் ஒரு மாதம் கழித்துப் போனால், மறுபடியும் விண்ணப்பத்தைப் பதிந்து கொண்டு கார்டை அனுப்ப மாட்டார்கள். மறுபடியும் போய்க் கேட்டால், இன்னும் ஒரு மாதத்துக்கு நீங்கள் புதிதாக விண்ணப்பம் வைக்க முடியாது என்பார்கள். தொலைந்து போன ஆக்ஸிஸ் வங்கி … Read more

என்ன செய்யலாம்?

ஆறு மாதமாகி விட்டது, பர்ஸைத் தொலைத்து. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கிக்கு நேராகச் சென்று புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டு வந்தேன். இருபது நாட்கள் ஆகியும் கார்ட் வரவில்லை. பிறகு மீண்டும் நேரில் சென்று விசாரித்தேன். உங்கள் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற தகவல் வந்தது. சரி என்று ஒரு மாதம் கழித்துச் சென்றேன். புதிய கார்ட் தருவதற்கு என் முகவரி போன்றவற்றைக் குறித்துக்கொண்டார்கள். ஒரு வாரத்துக்குள் கார்ட் வரும் … Read more

பங்கேற்பு

என்னுடைய புத்தக அலமாரிகளுக்குப் பணம் கேட்டதை வைத்து சிலர் என்னை ஃபேஸ்புக்கில் இழிவாக எழுதியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். வாழை பட விமர்சனத்துக்காகவும் என்னைப் பல பெண்கள் மிகவும் கேவலமாகத் திட்டினார்களாம். இதே பெண்கள் டீச்சரின் இடத்தில் வாத்தியாரைப் போட்டு பையனின் இடத்தில் சிறுமியைப் போட்டிருந்தால் இயக்குனரின் ட்ராயரைக் கிழித்திருப்பார்கள். ஆனானப்பட்ட புதுமைப்பித்தனே தனக்கு வந்த காசநோய்க்கு மருந்து வாங்கக் காசில்லாமல் தமிழ்ச் சமூகத்திடம் கையேந்தத்தான் வேண்டியிருந்தது. கையேந்திய மறுநாளே இறந்தது இன்னும் பெரிய துரதிர்ஷ்டம். கோபி கிருஷ்ணனும் அப்படித்தான் … Read more