டியர் சாரு
நீங்க கம்னாட்டி ஜெயமோகன் என எழுதியதை
பார்த்து ஏன் இப்படி எழுத வந்தது என வியப்பு
வேதனை சரியில்லை இதைப்போல எழுதுவது
என தெரிவித்து க்கொண்டு முடிக்கிறேன்
ஆரா
என் அன்பு நண்பரும் அடிக்கடி என் எழுத்து பற்றி எனக்குக் கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பவருமான கவிஞர் ஆரா அவர்களின் மேற்கண்ட கடிதம் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.
எங்கள் ஊர்ப் பக்கத்திலும் – பொதுவாக உலக வழக்கத்திலும் – அதி பிரியமான – அதி வாத்சல்யமான, செல்லமான, கொஞ்சலான துதிதான் கெம்னாட்டி என்பது. கடவுளைச் சொல்வது அது. அதை என் அன்புக்குரிய நண்பனான ஜெயமோகனுக்குச் சொன்னேன். ஜெயமோகனை எத்தனையோ பேர் எப்படியெப்படியெல்லாமோ பாராட்டியிருக்கலாம். அது எல்லாவற்றையும் விட அதிக கனமுள்ள பாராட்டு இந்த வார்த்தைதான். எங்கள் நாகூரில் தாய்மார்கள்கூட தங்கள் குழந்தைகளை ‘அட ஹையாத்தலிவான், இங்கே வாடா என் செல்லக்குட்டி” என்றுதான் கொஞ்சுவார்கள்.
எங்கள் ஊரின் செல்ல வார்த்தைகளை, கொஞ்சல் வார்த்தைகளைக் கேட்டால் இங்கே பலருக்கும் ஜன்னி கண்டு விடும்.
இதற்கெல்லாம் மாற்றுக் கலாச்சாரம் பற்றித் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எந்த contextஇல் ஒரு எழுத்தாளன் எழுதுகிறான் என்ற sensibilityயோடு அணுக வேண்டும்.
இப்படி ஒரு பதிலை எழுதுவதே எனக்கு அவமானமாக இருக்கிறது.
ஜோக் அடித்து விட்டு அதற்கு விளக்கம் சொல்வது, ஜோக் அடித்து விட்டு மன்னிப்புக் கேட்பது மாதிரி ஒரு அவலம் இது.
நிந்தாஸ்துதி என்பதைக் கேள்விப்பட்டதில்லையா என்ன? திட்டுவது போல்தான் இருக்கும். ஆனால் அதுதான் உச்சபட்ச பாராட்டையும் கொண்டிருக்கும்.
தமிழ்ச் சூழலில் எழுதுவதற்காக மீண்டும் மீண்டும் வெட்கப்படுகிறேன்.