முந்தாநாள் மிஷ்கினிடமிருந்து ஃபோன். செப்டம்பர் இருபது மிஷ்கினுக்குப் பிறந்த நாள் என்று எனக்குத் தெரியும். வாழ்த்து சொன்னேன். பத்தொன்பது இரவு மஹாபலிபுரத்தில் கொண்டாட்டம், வந்து விடுங்கள் என்று அழைத்தார். நானும் நேற்று இரவு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேற்று மாலைதான் பாண்டிச்சேரியிலிருந்து திரும்பியிருந்ததால் உடனடியாகக் கிளம்ப முடியாத குடும்பச் சூழல். அடுத்த ஆண்டு கலந்து கொள்வேன், இறை சக்தி அனுமதித்தால்.
இன்று பிறந்த நாள் காணும் மிஷ்கினுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.