அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: நேசமித்ரன் மதிப்புரை

ப்ரியமுள்ள சாருவிற்கு, 
நாவலின் மென்பிரதி கிடைத்தது. வாசிக்கத் துவங்கி விட்டேன். 

வழக்கத்தை விட வேகமான நடை , சொல்முறையில் நளினம் கூடி இருக்கிறது.இந்திய குடும்ப அமைப்புகளில்  ‘அன்பு’ என்ற பெயரில் நிகழும் வன்முறை , அக்கறை என்ற மோஸ்தரில் நிகழ்த்தும் ஆதிக்கம் இவை யாவும்உருவாக்கும் உயர் அழுத்தம்,மனச்சிதிலங்கள். இதிலிருந்து வெளியேற எத்தனிக்கும் எளிய மனிதர்களின் சிக்கலான போராட்டம் மிக நுட்பமான உளவியல் பார்வையுடன் பதிவாகி இருக்கிறது.

உணர்ச்சிகளின் சூதாட்டத்தில் கிரகங்களைப் பணயம் வைத்து ஆடும் கடவுளும் சாத்தானுமாய் பிரிந்து நின்று எழுதியிருக்கிறீர்கள்.
 நாவலில் ஒரு வரியாக நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.களி கூர்கிறேன்.எப்போதும் போல் பிறிதொரு நீண்ட இரவில் நட்சத்திரங்கள் மிதக்கும் கோப்பைகளின் அரை மாத்திர அளவு மட்டும் ஒலிக்கும் க்ளிங்குகளின் இடையே விரிவாக உரையாடுவோம் 
நேயத்துடன் 
நேசமித்ரன்